இடுகைகள்

அவமதிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலக்கழிவை அள்ளினாலும் சாதிக்க முடியும்! - இரு உதாரணங்கள்!

படம்
கருப்பு இந்தியா! அவமதிப்பு வாழ்க்கையை மாற்றியது! விமல்குமார் தன் பள்ளி வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம் கண்கலங்குவார். காரணம் ஹரியானாவிலுள்ள குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ளது அவரது ஊரான லத்வா நகரம். அதிலுள்ள வால்மீகி பஸ்தி என்ற பகுதியில் அவரது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர். தந்தைக்கு மார்க்கெட்டில் வேலை. தாய்க்கு வீடுகளை சுத்தம் செய்து கூட்டிப் பெருக்குவது. விமல்குமார் மட்டுமல்ல அவர் பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே மலக்கழிவை அள்ளுவது கூட்டி பெருக்குவது, அருகிலுள்ள சந்தையில் வேலை செய்வது என வாழ்ந்த வந்த மக்கள்தான். இதனால் அவர்கள் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் அதிகம். விமல்குமார் பள்ளியில் பணியாற்றும்போது அவரின் அம்மா பள்ளி மைதானம், வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்துகொண்டு இருப்பார். அதைப்பார்த்துக் கொண்டு விமல் கண்ணீரை அடக்கிக்கொண்டு இருப்பார். அவரின் சாதிப்படி வேலை என்று கிடைப்பது அதுதான். பள்ளி விட்டதும், தன் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு இருவருமாக வீடு திரும்புவார்கள். படிப்பில் தொடக்கத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லைதான். ஆனால் ஏழாவது மற

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்ப