இடுகைகள்

மூச்சுத்திணறல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலர்ஜிக்கான மருந்துகளும், இயற்கை மருத்துவ முறையும்!

படம்
  மாஸ்ட் செல் ஸ்டேபிலைசர்ஸ்  உடலில் வீக்கத்தை குறைத்து ஹிஸ்டாமைனின் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம். மூக்கில் அதிக சளி உருவாவதை தடுக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. குரோமோலின், நெடோகுரோமில், லோடோஸாமினா ஆகியவை இந்த வகையைச் சேர்ந்த மருந்துகளாகும். இவற்றை மூக்கில் இன்ஹேலர் வழியாக உறிஞ்சலாம். அல்லது கண்ணில் மருந்தாக பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை இரண்டு வாரம் பயன்படுத்தினால் போதும். பயன்களை பார்க்க முடியும். தூக்கம், அரிப்பு, கண்களில் கண்ணீர் அதிகம் வருவது, எரிச்சல் ஆகியவை இந்த மருந்தை பயன்படுத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளாகும்.  ஆன்டிலியோகோட்ரைன்ஸ் இந்த மருந்து மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மருந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களின் நுரையீரலில் உள்ள நீர்மத்தை குறைக்கிறது. இவை மூக்கில் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.  புரோன்சோடிலேட்டர்ஸ் ஒருவருக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிற மருந்து இது. இதனை காப்பாற்றும் மருந்து என்று அழைக்கின்றனர். அ...

அலர்ஜிக்கான அறிகுறிகள் எவை?

படம்
        போலியான அலர்ஜி என்பது உணவில் உள்ள கலப்படங்களால் அதிகம் நடைபெறுகிறது . உணவில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் , உலர்ந்த திராட்சை , உருளைக்கிழங்கு பொருட்கள் , ஹஸ்டாமைனை ஊக்குவிக்கும் சீஸ் , ஒயின் ஆகிய பிற பொருட்களும் அலர்ஜிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன . எளிதாக அலர்ஜி பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை மேலே சொன்ன பொருட்கள் அதிகம் பாதிக்கும் . இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது . ஆன்டிபாடியான ஐஜிஇயை இதில் இருக்கிறதா என்று சோதிப்பார்கள் . போலியான அலர்ஜி என்பது நோயாளிக்கு செரிமானக் கோளாறு உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது . குடல் பகுதியில் பால் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி , டைரமைன் , ஹிஸ்டாமைன் ஆகியவை கொண்ட உணவுகளால் ஏற்படும அலர்ஜி . சீஸ் , மது , துனா , சாஜேஜ் உணவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன . குளூட்டேன் , ஒயின்களில் உள்ள பொருட்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுகிறது . உரம் , உணவு நிறமிகள் , பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் காரணமாக ஏற்படும் பொதுவான அலர்ஜி . அறி...

கொரோனாவால் குரலை இழந்தேன்!

படம்
  கொரோனாவால் குரலை இழந்தேன்! இங்கிலாந்தைச் சேர்ந்த கானர்  ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.  இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.   ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.  “ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடி...