இடுகைகள்

மாற்றுத்திறனாளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!

படம்
கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன். அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது. இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக இரு