கஜகஸ்தானில் குழந்தைகளுக்கு நேரும் அநீதி!




Sixteen beds fill a room with barred windows in a closed institution for children with disabilities.



கஜகஸ்தானில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடுமையாக வன்முறைக்கும் புறக்கணிக்கும் உள்ளாவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறிவருகிறது.

நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் கஜகஸ்தானில்  வன்முறைக்கு இலக்காவதோடு, குடும்பத்தைச் சந்திக்கவும் வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மித்ரா ரிட்மன்.
அக். 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் 27 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை நேர்காணல் செய்த தில் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

கஜகஸ்தான் நாட்டிலுள்ள 19 மாநில காப்பகங்களில் மனநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் 2 ஆயிரம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சில மருந்துகளைக் கொடுத்து மயக்கமுறச்செய்து அவர்களை மனநல மருத்துவமனைகளுக்கு பணியாளர்கள் அழைத்துச் சென்று அழைத்துவிடுகின்றனர். இவர்களுக்கு சிசோபெரெனியாவுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதுதான் பிரச்னை. இம்மருந்து அச்சிறுவர்களை 24 மணிநேரத்திற்கு தூக்கத்திலேயே வைத்திருக்கும் சக்தி கொண்டது.

இங்கு வளரும் குழந்தைகளை பணியாளர்கள் தாக்குவது இயல்பாக இருக்கிறது. தரையைத் துடைக்கும் துடைப்பத்தை ஆயுதமாக்கி அடிப்பது, தலையை சுவரில் மோதுவது போன்ற குரூரங்களையும் அமலாக்கி இருக்கின்றனர். மேலும் பெரிய சிறுவர்களை அவர்களை விட சின்னவர்களுக்கு வேலை செய்ய வைத்துள்ளனர். பெண் குழந்தை ஒன்றுக்கு அதன் கைகளை மடக்கி துணியில் கட்டி வைத்துள்ளதும் அவர்களோடு பேசியதில் தெரிய வந்துள்ளது.

தொழிலாளர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 727 குழந்தைகள் 2018 ஆம் ஆண்டு அவர்களின் குடும்பங்களோடு ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. ஊழியர்களுக்கு குழந்தைகளை சரியாக பராமரிக்க கல்வி அளிப்பதோடு, இதனை அரசு கவனமாக கண்காணிப்பதும் அவசியம்.


நன்றி: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பிரபலமான இடுகைகள்