பிட்ஸ் - ரிசர்வ் வங்கி
பிட்ஸ்!
இந்தியாவிற்கான ரிசர்வ் வங்கி, 1947 ஆம் ஆண்டு வரை மியான்மருக்கும், 1948 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும் வங்கிச்சேவையை வழங்கி வந்தது.
பிரிட்டிஷார் ஆட்சியில் ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 படி, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி செயல்படும் விதம், அதற்கான விதிமுறைகள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய “The Problem of the Rupee – Its origin and its solution” என்ற நூலையொட்டி உருவானது. இந்த நூலை அம்பேத்கர், ஹில்டன் கமிஷனிடம் சமர்ப்பித்தார். இதனைப் பின்பற்றி 1926 ஆம்ஆண்டு ராயல் கமிஷன், ரிசர்வ் வங்கியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியது.
ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டபோது, கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. பின்னர், 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது.
ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் இந்தியாவிலேயே அதிக அளவாக தங்கம் இருப்பில் சேமிக்கப்பட்டு வருகிறது.
நன்றி: பாலகிருஷ்ணன்