ரான்சம்வேரின் எதிர்காலம்! - கிரிம் ஸ்பைடரின் கையில் உலகம்!
கணினிகளைத் தாக்கும் ரான்சம் வேர்
தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளைத் தாக்கி தகவல்களை சிறைப்பிடித்து காசு கேட்டு மிரட்டி தகவல்களை மீளத் தருவது நடைமுறையாகி வருகிறது. ரையுக் எனும் ரான்சம்வேர் வகை புரோகிராம் இங்கிலாந்திலுள்ள தடயவியல் நிறுவனமான யூரோஃபின்ஸ் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக, அங்குள்ள பிற நிறுவனங்களும் மிரண்டு போயுள்ளன.
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நிறுவனம் 5,30,000 அமெரிக்க டாலர்களைத் தருமாறு மிரட்டப்பட்டுள்ளது. பணத்தையும் பிட்காயின்களாக அக்கவுண்டில் போடுமாறு சட்டவிரோத கும்பல் மிரட்டியுள்ளது.
ரஷ்யாவில் செயல்பட்டு வரும் கிரிம் ஸ்பைடர் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ரையுக் என்ற ரான்சம்வேரை உருவாக்கியது. இதன் மூலம் இந்நிறுவனம் 3.7 மில்லியன் டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளது. இமெயில அட்டாச்மென்ட் மூலம் கணினிகளை தாக்கும் ரான்சம்வேர் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்கிரிப்ட் செய்துவிடும். பின் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே கணினியிலுள்ள கோப்புகளை மீட்க முடியும் என செய்தி மட்டுமே வரும். இப்போது பணம் என்றாலும் இதன் எதிர்காலம் வேறுமாதிரியான அச்சுறுத்தலாகவே இருக்கும். ஒருவர் இணையம் மூலமாக மிக எளிதாக இன்னொருவரின் கணினியை முடக்கி பணம் பறிக்க முடிவதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்?
நன்றி: நியூ சயின்டிஸ்ட்