கல்வி முறையை அரசியலாக்காதீர்கள்! - சேட்டன்பகத்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து, பல்வேறு திரைப்படங்கள், கதைகள், வெப் சீரிஸ் கூட வெளியாகி விட்டன. நிச்சயம் கல்விமுறையில் பிரச்னைகள் இருக்கிறதுதான். அதனை சரிசெய்வது அவசியம். குறைகளை மட்டும் பேசாமல் அதனை தீர்வு செய்வதற்கான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் முக்கியம்.
அண்மையில் கல்வி மசோதா 484 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்திலும் மேற்சொன்ன பிரச்னைகள்தான் நிறைவேறின. நீண்ட மசோதாவில் தற்போது உள்ள கல்விப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வரைபடமும் இதில் உள்ளது. இதிலுள்ள மும்மொழிக் கொள்ளையை மட்டுமே எடுத்து பேசி பேசியதால், அதிலுள்ள முக்கியமான சிந்தனைகளை இன்று யாரும் பேசவில்லை. பிற விஷயங்களைப் பற்றியும் மக்கள் மறந்தே போனார்கள். மக்கள் முக்கியமாக இந்து, இந்துத்துவா, பாஜக ஆகிய விஷயங்களிலேயே நின்று விட்டார்கள். இது முட்டாள்தனமாக இல்லையா?
இஸ்ரோவின் முன்னால் இயக்குநரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கி கல்வி மசோதா இது. இதில் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் திறன்களைக் கொண்டதாக மாணவர்களை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகளை அவை செயலாக்கம் பெறும் முன்பே முறியடிப்பது தவறானது என நான் கருதுகிறேன். இதன் பொருள், நான் அரசின் கொள்கையை ஆதரிக்கிறேன் என்பது அல்ல.
குறிப்பிட்ட சிந்தனையை பிரச்னைக்கு தீர்வாக ஒருவர் முன்வைக்கும்போது, உடனே அதனை முளையிலேயே கிள்ளி எறியக்கூடாது என்று கூறுகிறேன். இதனை ஆரோக்கியமான விவாதமாக விவாதித்து குறைகளை இந்திய அரசிடம் முன்வைக்கலாம். ஆனால் அதனை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து அரசியலாக மாற்றுவது அபாயகரமானது.
டில்லியிலுள்ள ஒரு பையன் இந்தி,ஆங்கிலம் கற்பதோடு தமிழும் கற்றால் எப்படியிருக்கும்? இது இடம்பெயர்ந்து வேலை தேடி வருபவர்களுக்கு உதவும். குஜராத்தி மாணவி வங்காளமொழி கற்பதையும், வட இந்திய மாணவன் தமிழ் கற்பதையும் நினைத்துப் பாருங்கள். கல்விக் கொள்கை என்பது மசோதாதான். இன்னும் சட்டமாகவில்லை. மும்மொழிக்கொள்கை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. நேருவில் காலத்தில் நவோதயா பள்ளிகள் இம்முறையில் செயல்பட்டன. இக்கொள்கை வட இந்தியர்களுக்கு உதவும் என நம்புகிறேன். கல்விக்கொள்கை என்பது இந்திய மாணவர்களை உயர்த்தும் முக்கியமானது. இதில் அரசியல் செய்வது என்பது எதிர்காலத்தை அழித்துவிடும். அரசியல் என்பது வேறு, கல்வி என்பது வேறு.
நன்றி:டைம்ஸ் - சேட்டன் பகத்