ஆன்லைன் திருட்டில் முந்தும் தமிழ்நாடு!




Image result for online fraud





உங்கள் போனிலும் பிராமணத் தமிழ் பேசி, டெபிட் கார்ட்டின் நம்பர்களை கேட்டு பேங்க் மானேஜரே பேசியிருப்பார். அதை நீங்கள் நம்பாமல் இருந்தால் உங்கள் பணம் தப்பிக்கும். இதை எழுதும் எனக்கும் இதே போல அழைப்புகள் ஒருமுறை வந்தது. நான் அதை அலட்சியப்படுத்தினாலும், அருகிலுள்ள லே அவுட் நண்பர் இந்த அழைப்புகளை டைம்பாசுக்காக பயன்படுத்துவார்.

எப்படி என்றால் கேள்விகள் கேட்டு பேசிக்கொண்டே இருப்பார். இப்படி எங்கள் ஆபீசிலுள்ள பத்து பேர் கேள்விகளைக் கேட்டு அந்த குளறுபடி ஆட்களை குழப்பி அடித்த கதை உண்டு. ஆனால் பலரும் அதை உணமை என நம்பி எண்களைக் கொடுத்து ஏமாறுவதை நாம் தந்தியில் படித்து வருகிறோம்.


2016- 19 காலகட்டத்தில் தமிழ்நாடு இதுபோல போலி அழைப்பு, கடன் அட்டை போலி தயாரிப்பு ஆகியவற்றால் நிறைய பணத்தை கோட்டை விட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு போலீசார், கடன் அட்டைகளை போலியாகத் தயாரித்த பல்கேரிய குழுவை  வலைவீசி பிடித்தனர். அவர்களிடமிருந்து வழக்கமாக சீஸ் செய்யும் ஸ்கிம்மர் கருவிகளையும் காந்த டேப்புகளையும் கண்டுபிடித்தனர். பணத்தை இழந்த வகையில் முதலிடத்திலும், போலி அழைப்புகளில் மூன்றாது இடத்தையும் பிடித்துள்ளது.

ஏன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது? காரணம், இங்குள்ள மக்களின் சேமிக்கும் பழக்கமும், சம்பாதிக்கும் ஆசையும்தான். எனவே வட இந்திய ஆட்கள் குறிவைத்து அடித்து பணத்தைப் பறிக்கின்றனர். மேலும் இங்கு ஐடி ஆட்களும் அதிகம். போலீசும் தற்போது ஆன்லைன் திருட்டுக்களை பிடிப்பதில் வேகம் காட்டி வருகின்றனர் என்கின்றார் சென்னை பல்கலைக்கழக கிரிமினாலஜி துறை பேராசிரியரான எம் சீனிவாசன்.

வயதானவர்களை குறிவைத்து கொள்ளையர்கள் செயற்பட்டு வங்கி தகவல்களைப் பெற்று கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களுக்கு டெக் நுட்பங்கள் தெரியாது என்பது அவர்களுக்கு பலமாக மாறியுள்ளது.

ஹரியாணா, கர்நாடகம், மகாராஷ்டிரம், டில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இணையத் திருட்டுகளில் பணத்தை பறிகொடுப்பதில் முன்னிலை வகிக்கின்றன.

தப்பிக்க என்ன செய்யலாம்?

தயவு செய்து அரசை நம்பாதீர்கள். உங்களை மட்டும் நம்புங்கள். வங்கிகள் தரும் எச்சரிக்கைகள் கடைபிடித்தால் போதும். மேலும் ஏடிஎம் மெஷில் கார்ட்டை நுழைக்கும்போது, அங்கு ஸ்கிம்மர் கருவி இருக்கிறதா என செக் செய்து சேவையைப் பயன்படுத்துங்கள். உங்கள் விழிப்புணர்வுதான் இங்கு முக்கியம்.

நன்றி: டைம்ஸ் - சித்தார்த்தா பிரபாகர்.