சமூக பொறுப்பு சட்டம் செயல்படுகிறதா? - இந்திய அரசு கண்காணிக்கிறதா?


Image result for CSR cartoon

இந்திய அரசின் சமூகநலப்பொறுப்பு (CSR Act) சட்டம் (2013 ) அமலானபிறகு, இதுதொடர்பாக செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்பு மற்றும் கலாசாரம் சார்ந்த நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேர்வது மிகச்சிரமம். இதனைச் சாத்தியப்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உருவாயின.

 இவை அரசின் திட்டங்களை பல்வேறு அடிப்படை வசதிகளற்ற தொலைதூரக் கிராமங்களிலும் கொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்கின்றன.

உலக நாடுகளில் தொழில்நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது.

இந்திய அரசு சமூகப்பொறுப்பு திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மேம்படுத்தி உருவாக்கியது. இதன் விளைவாக சூழல், கல்வி, வாழ்க்கைத்தரம், சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உழைக்கும் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இம்முறையில் இந்தியாவில் கேட்ஸ் பவுண்டேஷன், டாடா டிரஸ்ட், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.

1980 -90 களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றன. இதன் விளைவாக, சமூகப்பொறுப்பு சார்ந்த திட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின.  இந்திய அரசின் சட்டப்படி சமூகப்பொறுப்பு சார்ந்த திட்டங்களுக்கு நிறுவனங்கள் 2 சதவீதம் செலவழிப்பது கட்டாயமானது. இதற்கான திட்டங்களை உருவாக்கி செய்வதற்கு சமூகத்தின் மீதான அக்கறை கொண்ட நபர்கள் தேவை என நிறுவனங்கள் உணர்ந்தன. நவீன தலைமுறையினர் இணையத்தில் மட்டுமல்ல சமூக பொறுப்புகளிலும் முன்னிலையில் இருந்தனர். தங்கள் பெயரை மக்கள் மனதில் இருத்தும் இப்பணிகளைத் திட்டமிடும் தன்னார்வலர்களுக்கு  பெருநிறுவனங்கள் நல்ல ஊதியம் அளித்தன.

2024 ஆம் ஆண்டு கல்வி, சுகாதாரம், உளவியல் துறைகளில்  முறையே 6% மற்றும் 19% வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பன்னாட்டு நிறுவனங்களில் இப்பணிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

 நிறுவனம் பற்றிய அறிவு, மக்களுடன், தன்னார்வ அமைப்புகளுடன் தொடர்பு ஆகியவை இப்பணிக்கு அவசியமான தகுதிகள்.

இக்கட்டுரை எழுதி பிரசுரித்தபோது, முறையாக சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அபராத தொகை விதிப்பதாக அரசு அறிவிப்பு வெளியானது.

தகவல்: Education Times

படம் - பின்டிரெஸ்ட்
 




பிரபலமான இடுகைகள்