இடுகைகள்

இலவசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலவச மின்னூல்கள் - ஃப்ரீதமிழ் இபுக்ஸ்

படம்
      இலவச மின்னூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸில் தேடி வாசிக்கலாம். கூடுதலாக, இன்டர்நெட் ஆர்ச்சீவிலும்,பிரதிலிபி தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன.  வாய்ப்பிருப்பவர்கள் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகள் - காப்புரிமை இல்லாத இலவச மின்னூல் வெளியீடு!

படம்
        https://archive.org/details/20250218_20250218_0503  CC0 1.0 Universal இந்த நூல், சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பும் நோக்கத்தில் காப்புரிமை உரிமைகளை விலக்கிக்கொண்டு வெளியிடப்படுகிறது. நூலை வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை தரவிறக்கி வாசிக்கலாம்.  

ரோனி சிந்தனைகள்! - உன்னதம் குரூரம் இரண்டுக்குமான நடுநிலை

படம்
            ரோனி சிந்தனைகள் குடமுழுக்கு நன்கொடைகள் இப்போதெல்லாமாம் அதிகரித்துவிட்டன. கதவை முட்டி மோதிக்கொண்டு இரு தலித் பெண்கள் நின்றனர். என்னவென்று கேட்டதற்கு, கோயிலுக்கு செல்லும் பாதையை செப்பனிடுகிறோம். காசு குடுங்க என்றார்கள். விவரம் கேட்டால் கூட பொறுமையின்றி பதில் சொன்னவர்கள், இவ்ளோ பேசுறீங்க ஒரு ரூபா கைல தரமாட்டீங்கறிங்க என்று அலுப்போடு சொல்லிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே இன்னும் மோசம். கோவில் அன்னதானத்தை நம்பித்தான் உறவினரின் குடும்பமே வாழ்கிறது. அவர்களிடம் ஒற்றை ரூபாய் வாங்கிவிட்டால் கெட்டிதான். எங்கள் பக்கத்து கடைகளில் புரோட்டா ஒன்று பதினைந்து ரூபாய்க்கு விற்கிறது. ஒரு செட் முப்பது ரூபாய். நிலத்தகராறுக்கு தாயாரை கவசமாக்கி போராடும் சிறிய மாமனின் புகார் கடித ரசீதை பார்க்கும்போதெல்லாம் பசியில் அல்லாடும் அவரது இரு மகன்கள் முகம் நினைவுக்கு வந்து போகிறது. ஒரு பதிவுத்தபாலின் செலவு இருபத்தொன்பது ரூபாய் ஐம்பது பைசா மட்டுமே. நீங்கள் முப்பது ரூபாயாகவும் கொடுக்கலாம். மனிதர்களின் மனம் உன்னதம், குரூரம் என்ற இரண்டு திசைகளில் அமைந்த தொடமுடியாத துருவங...

வெற்றியே நிச்சயம் மண் மீது சத்தியம் - இலவச மின்னூல் வெளியீடு

           நூலை இன்டர்நெட் ஆர்ச்சீவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.       https://archive.org/details/20241212_20241212_0234  பொறுப்புத் துறப்பு கோமாளிமேடை குழு, நூலை இன்டர்நெட் ஆர்ச்சீவில் மட்டுமே பதிவிட்டுள்ளது. மற்றபடி நூலை தரவிறக்கி தமிழை வாழ வைக்க வேறு வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள், குறுஞ்செய்தி பகிர்வு தளங்களில் பகிர்வதற்கு அவரவரே பொறுப்பு. அத்தகைய செயல்பாடுகளுக்கு கோமாளிமேடை பொறுப்பாகாது. குறிப்பாக, தலித் அரசு அதிகாரிகள் நூலை வாசிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உலகப்புகழ்பெற்ற தொழில்நுட்ப கலகத் தலைவன் லினஸ் டோர்வால்ட்ஸ்! - சாப்ட்வேர் ரெபல் நூல் விமர்சனம்

படம்
  லினஸ் டோர்வால்ட்ஸ் - சாஃப்ட்வேர் ரெபல் 88 பக்கங்கள் கொண்ட சிறுநூல். இலவச மென்பொருள் இயக்கம், அதன் நோக்கம் பற்றி கூறுவதோடு பின்லாந்தில் பிறந்த லினஸ் டோர்வால்ட்ஸின் வாழ்க்கை பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக ஒருவரின் சுயசரிதை என்பது அவரின் பலங்களை விஸ்வரூபமாக காட்டி பலவீனங்களை கீழே அமுக்குவதுதான். இந்த நூலில் லினஸ் பற்றிய பெரிய ஆச்சரியங்கள் ஏதுமில்லை. அவர் லினக்ஸ் என்ற ஓஎஸ்ஸை உருவாக்கி இலவச இயக்கமுறையாக இணையத்தில் பதிவிடுகிறார். இதை கோடிக்கணக்கான நிரலாளர்கள் மேம்படுத்துகிறார்கள். அதன் வழியாக லினக்ஸ் குழுவினர் உருவாகிறார்கள். இவர்களே இலவச மென்பொருள் என்பதை பின்னாளில் வளர்த்தெடுக்கிறார்கள்.  இந்த நூலில் நாம் என்ன படித்து தெரிந்துகொள்ளலாம்? லினஸ் டோர்வால்ட்ஸ் தான் கோடிங் எழுதிய லினக்ஸை காசுக்கு விற்றால் அவர் தனி ஜெட் விமானம் வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை. எதனால் அவர் வணிகநோக்கில் வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை என்று நூல் பேசுகிறது. நூலில் பில்கேட்ஸ் மீதான பகடி பக்கத்திற்கு பக்கம் இருக்கிறது. அதிலும் அவரைப் பற்றி லினஸ் சொல்வது தனிவகை.  இலவச மென்பொருட்கள...

விளம்பர இடைவேளை - ஃப்ரீதமிழ்இபுக்ஸ்- இன்டர்நெட் ஆர்ச்சீவிலுள்ள நூல்கள்

படம்
  மேற்கண்ட நூல்களின் பெயர்களை ஃப்ரீதமிழ்இபுக்ஸ் வலைத்தளத்தில் தட்டச்சு செய்து தேடினாலே நூல்களை எளிதாக பெறலாம். தரவிறக்கி வாசிக்கலாம். பிறருக்கும் எளிதாக பகிரலாம். தரவிறக்கும் பக்கத்தில் கீழே இன்டர்நெட் ஆர்ச்சீவ் இணைய முகவரி இருந்தால், நூலை தரவிறக்காமல் இணையத்தில் நேரடியாக நூலைப் போலவே பிரித்து வாசிக்கலாம்.  இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திலும் ஆராபிரஸ் வெளியீடான இலவச நூல்களைத் தேடிப் பெறலாம். அங்கேயே நூலை பிரித்து வாசிக்கலாம். தேவையான  நூலின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.   தம் வலைத்தளத்தில் புதிதாக தேடுதல் வசதியை சேர்த்த ஃப்ரீதமிழ்இபுக்ஸ் குழுவினருக்கும், வழிகாட்டுதலை அளித்த கணியம் சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.....

இலவச மென்பொருட்கள் - டெய்ல்ஸ் 5.0, எரேசர் ப்ரீ, க்யூ டையர்

படம்
  இலவச மென்பொருட்கள் பிரைவசி எரேசர் ப்ரீ 5.23 சி கிளீனர் பயன்டுத்தியிருப்பீர்கள். வேலைகள் எல்லாம் அதேபோலத்தான். வித்தியாசம் எளிமையான அதன் செயல்பாடுதான். கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கிறது. ஹார்ட் டிஸ்கை தூய்மையாக வைக்கிறது. குக்கீகளை கூட எதை அழிக்கலாம் விட்டுவிடலாம் என்ற ஆப்சன்கள் இருக்கிறது. கூடுதலாக புரோகிராம் அன்இன்ஸ்டாலரும் உள்ளது. வேகமாக புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்கிறது. மற்றது பர்ஸ் கனமாக இருந்தால் காசு கொடுத்து மென்பொருள் வாங்கினால் கூடுதல் விஷயங்களைச் செய்யலாம்.   விண்டோஸ் 7, 8.1, 10, 11 வர்ஷன்களில் பயன்படுத்தலாம்.  க்யூ டையர் 10.73 ஃபைல் எக்ஸ்ப்ளோரர் பணிதான். முதலில் இயக்கியவுடன் இடியாப்பத்திற்குள் இட்லி, பொங்கல் இருப்பது போல தோன்றும். விரைவில் அந்த மயக்கம் களைந்து கணியம் சீனிவாசன் போல நுட்ப வல்லுவத்துவத்தை பெற முடியும். கொஞ்சம் நிதானம் தேவை. மற்றபடி பயன்படுத்தி புரிந்துவிட்டால் இந்த மென்பொருள் உங்களை வெகுவாக ஈர்க்கும்.  விண்டோசில் மட்டும் பயன்படுத்தும் மென்பொருள்தான் இதுவும்.  டெய்ல்ஸ் 5.0 எட்டு ஜி.பி இருக்கும் யூஎஸ்பியை அமேசானில்...

10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?

படம்
  பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.  இத்தனையும்  தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.  200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.  ஆதித் பலிச்சா (வலதுபுறம்) வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்கள...

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   ...

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

படம்
உடனே தலைப்பை படித்தவுடனே சந்தோஷப்படவேண்டாம். இதற்கு காரணம், பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புதான். பலருக்கும் சம்பள வெட்டு, வேலையிழப்பு, தொழில் பாதிப்பு என அனைத்தும் இந்த தலைப்பின் பின்னால் உள்ளது. அதை நாம் விளக்கமாக பேசுவோம். மேற்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்ற ஆய்வை 2021ஆம் ஆண்டிற்கான ஏஎஸ்இஆர் அறிக்கைதான் கூறியது. ஆறிலிருந்து 14 வயது வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே குறைந்துள்ளது. 2018இல் 32.5 சதவீதமாக இருந்த தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 24.4 (2021) சதவீதமாக குறைந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சதவீதம் 64.3 சதவீதமாக இருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது புதிதானது அல்ல. இருந்தாலும் அதன் சதவீதம் பெருமளவு வேறுபடுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? தனியார் பள்ளிகளில் பெருந்தொற்று காலங்களில் படிப்பு ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை இப்படி சொல்பவர்களின் அளவு 40 சதவீதம். 62 சதவீதம் பேர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுப் பள்ளிக்கு மாறியிருக்கிறார...

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலி...

செய்தி இலவசமல்ல!

படம்
  அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.  இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இத...

தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!

படம்
            காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர் ! கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி , அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது . இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் . இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு , தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார் . அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார் . இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர் , இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் . இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர் . இவரது தோட்டத்தில் மிளகு , பீன்ஸ் , ஏலக்காய் , பீர்க்கை , கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார் . பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும்...

அரசுக்கு உதவிய துறவி நடத்தும் இலவச மருத்துவமனை! - லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை

படம்
              கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய இலவச மருத்துவமனை ! லடாக்கில் உள்ளது ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனை . இதனை நடத்தி வருபவர் பௌத்த துறவியான லாமா தும்ப்ஸ்தான் சோக்யால் . இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் என அனைவருமே சேவை நோக்கத்துடன் பகுதி நேரமாக செயல்படுபவர்கள் . இன்னும் ஒன்றை கூற மறந்துவிட்டேன் . இந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது . சோனம் நோர்பு நினைவு மருத்துவமனையை அரசு நடத்தி வந்தது . ஆனால் மாவட்ட நிர்வாகம் மெல்ல அதிகரித்து வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக சமாளிக்க முடியாத நிலை . உடனே லடாக் ஹார்ட் பௌண்டேஷன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவி கேட்டனர் . அதற்கு துறவி லாமா ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார் . இங்குள்ள மருத்துவர்கள் போதாது . கூடுதலாக மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்றார் . முதலில் இந்த மருத்துவமனையில் நோய் உள்ளதாக சந்தேகப்பட்டவர்களை தங்க வைத்து கண்காணித்தனர் . நோய் உறுதியானதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற...

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கண...

இந்தியா கோவிட் -19க்கான மருந்துகளை எப்படி விநியோகம் செய்யவிருக்கிறது?

படம்
      இந்தியாவில் இன்று தடுப்பூசி வழங்குவது முக்கியமான பணியாக மாறியுள்ளது . இந்த வகையில் நாட்டில் 1. 4 பில்லியன் அளவில் தடுப்பூசிகளை நாடு முழுக்க கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது . இந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் என்று நிறுவனமே நாட்டில் பெரிய சிரிஞ்ச் தயாரிப்பாளர் . 570 மில்லியன் என்ற தனது தயாரிப்பை அடுத ஆண்டில் ஒரு பில்லியனாக மாற்ற முடிவெடுத்துள்ளது . கண்ணாடி பாட்டில்களை தயாரிப்பது நிறுவனத்திற்கான சவாலாக இருக்கும் . கோவிட் -19 மருந்துகளுக்கு அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இரண்டு . சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா , ஸைடஸ் கடிலா . சீரம் நிறுவனம் 2,100 கோடி முதலீட்டில் ஐந்து மருந்துகளை சோதித்து வருகிறது . 500 கோடி முதலீட்டில் கடிலா இரண்டு மருந்துகளை சோதித்து வருகிறது . பணக்கார நாடுகளில் 51 சத்வீத கோவிட் -19 மருந்துகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன . உலக மக்கள்தொகையில் இதன் பங்கு 13 சதவீதம்தான் . உலகில் 3.6 பில்லியன் அளவுக்கு கோவிட் -19 மருந்துகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது . இந்தியாவில் தற்போது சீரம் ம...

ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

படம்
        sample picture cc       யமராஜா உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது . அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார் . பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார் . ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர் . சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது . ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர் . ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல . வழுக்கும் பாறைகள் , நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன . பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார் . பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு , இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார் . தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை . பல்வேறு தொழிலாளர்கள் , அதிகாரிகள் , சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார் . ...

இலவச விண்டோஸ் மென்பொருட்கள் உங்களுக்காக....

படம்
இலவச மென்பொருட்கள்! வின்அப்டேட்ஸ் வியூ- winupdatesview விண்டோஸில் கிடைக்கும் அனைத்து அப்டேட்களையும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம். இல்லையெனில் விண்டோசில் அப்டேட்ஸ் மெனுவில் சென்று செட்டிங்குகளை மாற்ற வேண்டும். இந்த மென்பொருள், உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ்களை வழங்கும். எம்ஐ டெக் இன்போபார் 3 -mitech infobar3 இந்த மென்பொருள் உங்களது கணினியில் சிப், ராம் செயல்பாடு பற்றிய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம். இதில் கேப்ஸ்லாக், ஸ்கோரல் லாக், நம்ஸ் லாக் பற்றி தகவல்களையும் அறியலாம். கூடுதலாக ராய்டர்ஸ் நிறுவன செய்திகளும் கிடைக்கிறது. பிக்ஸெலிட்டர் Pixelitor 4.2 ஜிம்ப் அளவுக்கு சிறப்பான மென்பொருள் அல்ல. ஆனால் படங்களை ஏராளமான பிரஷ்களை கொண்டு அழகுபடுத்த முடியும். படங்களுக்கு நிறைய எஃபக்டுகளை கொடுத்து அதனை சிறப்பான படமாக மாற்றலாம். நன்றி - கம்யூட்டர்ஆக்டிவ்

சிறந்த இலவச மென்பொருட்கள் 2020

படம்
நார்ட் லாக்கர் - Nordlocker இதில் விபிஎன் வசதியும் உண்டு. எனவே இலவச கணக்கில் 5 ஜிபி வரையில் தகவல்களை, ஆவணங்களாக சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். சிறப்பாக செயல்படுகிறது. இதன் கோகிரிப்ட் எனும் என்கிரிப்ஷன் வசதி சிறப்பாக உள்ளது. உங்களது தகவல்கள் நெருங்கிய நண்பர்கள் சிறந்து பார்க்கும்படி கூட செட்டிங் அமைத்துக்கொள்ளலாம். பீஃப்டெக்ஸ்  beeftext இமெயிலை கூட வெண்முரசு சைசுக்கு எழுதுபவர்களுக்கு இந்த இலவச மென்பொருள் உதவும். இதில் டைப் செய்பவர்களுக்கு உதவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை நீங்கள் பயன்படுத்தும்போடு கற்றுக்கொள்வீர்கள். வேவ் எடிட்டர் அடாசிட்டியைப் போன்றதுதான். ஆனால் சிறப்பாக இயங்குகிறது. எம்பி3 பாடல்களுக்கான தொகுப்புகளுக்கு ஏற்றது. டாஸ்க் எக்ஸ்ப்ளோரர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் பணியைத்தான் செய்கிறது. இதனை டெக் ஆட்கள் சிறப்பாக பயன்படுத்த முடியும். அந்தளவு விரிவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள். நன்றி - வெப் யூசர் இதழ்

சமூகச்செயற்பாடுகளுக்கு தனியார் அளித்த நிதியுதவி!

படம்
giphy.com அரசு மட்டுமல்ல, இன்று தனியாரும் மக்களின் நலனில் பங்கெடுக்கிறார்கள். சட்டத்தின் நிர்பந்தம் இருக்கிறதுதான். ஆனாலும் அதிலும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி திட்டங்களை செயற்படுத்துவதில் தனியாரின் பங்கு முக்கியமானது. மிகச்சில ஆண்டுகளில் அரசு ஒழுங்காணையம் போலத்தான் செயற்பட விருக்கிறது. உலக வர்த்தக கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தம் அப்படி இருக்கிறது. 2014-18 காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த உள்ளூர் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் திட்டத்திற்காக செலவழித்த தொகை 13 ஆயிரம் கோடி ரூபாய்.  இதன் விளைவாக இத்துறை 12 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.  தனியார் நிறுவனங்கள் போக, தனி நபர்கள் மட்டும் 43 ஆயிரம் கோடி ரூபாயை சமூக செயற்பாடுகளுக்காக செலவிட்டுள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் அளிக்கும் நிதியுதவியை ஒப்பிட்டால் 21 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. 2014 -18 ஆம் ஆண்டில் தனிநபர் நிதியுதவி 60 சதவீதமாக உள்ளது. அதாவது, இந்த பங்கு சமூக செயற்பாடுகளுக்கு மட்டுமேயானது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ச...