சிறந்த இலவச மென்பொருட்கள் 2020
நார்ட் லாக்கர் - Nordlocker
இதில் விபிஎன் வசதியும் உண்டு. எனவே இலவச கணக்கில் 5 ஜிபி வரையில் தகவல்களை, ஆவணங்களாக சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். சிறப்பாக செயல்படுகிறது. இதன் கோகிரிப்ட் எனும் என்கிரிப்ஷன் வசதி சிறப்பாக உள்ளது. உங்களது தகவல்கள் நெருங்கிய நண்பர்கள் சிறந்து பார்க்கும்படி கூட செட்டிங் அமைத்துக்கொள்ளலாம்.
பீஃப்டெக்ஸ் beeftext
இமெயிலை கூட வெண்முரசு சைசுக்கு எழுதுபவர்களுக்கு இந்த இலவச மென்பொருள் உதவும். இதில் டைப் செய்பவர்களுக்கு உதவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை நீங்கள் பயன்படுத்தும்போடு கற்றுக்கொள்வீர்கள்.
வேவ் எடிட்டர்
அடாசிட்டியைப் போன்றதுதான். ஆனால் சிறப்பாக இயங்குகிறது. எம்பி3 பாடல்களுக்கான தொகுப்புகளுக்கு ஏற்றது.
டாஸ்க் எக்ஸ்ப்ளோரர்
விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் பணியைத்தான் செய்கிறது. இதனை டெக் ஆட்கள் சிறப்பாக பயன்படுத்த முடியும். அந்தளவு விரிவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள்.
நன்றி - வெப் யூசர் இதழ்