தொழில் நாயகன் நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இயக்குநர்!






Image result for satya nadella





சத்யா நாதெள்ளா - நம்பர் 1

நீங்கள்தான் நம்பர் 1 தலைவராக ஃபோர்ப்ஸ் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அவரே வெட்கப்படுவார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்டில் சேர்ந்தவர், இன்று 129 பில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவர் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் போல ஊடகங்களில் அறிமுகம் கொண்டவர் அல்ல. ஆனால் சிறப்பான குழுக்களை அவர்களின் அரசியல் கடந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். சிறந்த இயக்குநரின் தகுதி என்பது, குழுவாக மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே காட்டுவதுதான் என்கிறார்.

2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன இயக்குநராக அறிவிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவின் முன் நிறைய தடைகள் இருந்தன. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் இருந்தது. அதனை ஒழுங்கு செய்து பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிறுவனத்தின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கினார். மேக கணிய முறையை லினக்ஸ் கட்டமைப்பை இணைத்து வலிமையாக்கினார்.

நிறுவனத்தின் பலத்தோடு பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதுவே அவரை பலமாக்கியது.