புத்தாண்டில் மாறுவது என்னென்ன விஷயங்கள்?
giphy |
புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் சொல்லி காஜூ கத்திலி கொடுத்தால் போதுமா? இந்த ஆண்டில் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ரயில் கட்டண உயர்வு புத்தாண்டு பரிசாக மத்திய அரசு நமக்கு அளித்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்கள் மாறுகின்றன என்று பார்ப்போம்.
சேமிப்புக்கணக்குக்கு காசு கிடையாது.
சேமிப்பு கணக்கிலிருந்து நெப்ட் முறையில் யாருக்கு பணம் அனுப்பினாலும் சேவைக்கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை இணையம் அல்லது மொபைல் மூலம் செய்து சோதித்துப் பாருங்கள்.
பாதுகாப்பு முக்கியம்
தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துவிட்டு வாராக்கடன் கணக்கு எழுதியதில் பெரிய வங்கி எஸ்பிஐ. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தால் கூட ஓடிபி கேட்கிறார்கள் இது இரவு 8மணியிலிருந்து காலை 8 மணி வரை அமலாகுமாம்.
உடையும் விண்டோஸ்
விண்டோஸ் போன்களை உலகில் அரிதான மனிதர்களே தில்லாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இதில் வாட்ஸ் அப் இயங்காது. பார்த்துக்கொள்ளுங்கள். உருப்படியான ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் வாங்குவது உங்களது சாமர்த்தியம்.
வலுக்கட்டாயமாக டிஜிட்டல் ஆக்குறோம்
50 கோடி அல்லது அதற்கு மேல் காசு பார்க்கும் நிறுவனங்கள் இனி தங்களின் வணிகப் பரிமாற்றங்களுக்கு ரொக்கமாக எதனையும் பயன்படுத்த முடியாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதி இது. இதனால் மாஸ்டர், விசா, ருபே கார்டுடன் ஒப்பந்தமிட்டு வணிகத்தை விரிவாக்குங்கள்.
புத்தாண்டில் தடை
கேரளம், இந்த ஆண்டிலிருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உள்ளது. விரைவில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
நன்றி - டைம்ஸ் 1,2020