சாவைப் பார்த்து அசல் பயம் லேது - வினய விதேயா ராமா!

Related image

வினய விதேயா ராமா - தெலுங்கு

இயக்கம் - போயபட்டி சீனு

ஒளிப்பதிவு - ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ வில்சன்

இசை - டிஎஸ்பி





Image result for vinaya vidheya rama


போயபட்டி சீனு படத்தில் கதை ஏதோ ஒருசமயம் தெரியும். ஒட்டுமொத்தமும் ஆக்சன் காட்சிகளில் கரைந்துவிடுவதுதான் நிஜம். பரசுராமரின் கையில் இருக்கும் கோடரி, வில்லன்களின் தலைகளை வெட்டி காற்றில் பறக்க விடுவது என அனைத்து விஷயங்களும் நீக்கமற படத்தில் இருக்கின்றன.

ஆனால் படத்தின் குறை கதையில் இருக்கிறது.

ஐயையோ

தம்பி எப்படி வேலை செய்து அண்ணனை படிக்கவைக்கமுடியும்? அண்ணன்களை... அதோடு அவர் செய்யும் ஃபேன்டசி பயணங்களையும் நம்மால் யோசிக்க முடியவில்லை. கனல்கண்ணன் சண்டைக்காட்சிகளுக்கு பயங்கரமாக யோசித்திருக்கிறார். பல சமயங்களில் காட்சிகளை கனல் கண்ணனே யோசித்து எடுத்தாரோ எனும்படி ஆக்சன் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள்.

Image result for vinaya vidheya rama


பெண்களுக்கு மரியாதை என்பது போல காட்சிகள் தொடங்கினாலும், படத்தில் அப்படியான செய்திகள் கிடையாது. சலங்கை கட்டி ஆடுவது கேவலம் என்பதற்காக அழும் பிரசாந்தின் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. நாயக துதிக்காட்சிகள் நிறைய இருக்கின்றன. கியரா அத்வானி பாடல்களுக்காக பயன்படுகிறார். ஒடிசா முதல்வரே வந்து உதவி கேட்கும் காட்சிகள் ஐய்யோடா சொல்ல வைக்கின்றன. 

டிஎஸ்பி வில்லனுக்கான பிஜிஎம்மில் சிறப்பாக தன் பெயரைப் பதிக்கிறார்.

ராம்சரணுக்கு பெரிய வேலை இல்லை. பொறந்தபோதே இறப்பை ஜெயிச்சு வந்தவன்டா என்று ஆவேசப்பட்டு அண்ணனைப் பறிகொடுக்கிறார். அப்புறமும் சிம்பிளாக வந்து விவேக் ஓபராயை போட்டுத் தள்ளுகிறார். ராமின் சூப்பர் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர படம் முடிகிறது. கதையை நம்பாமல் கனல் கண்ணனின் ஆக்சன் காட்சிகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இது. அதற்காக மட்டுமே படத்தை பார்க்கலாம்.

கோமாளிமேடை டீம்