2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2



Image result for mumbai comedy store


நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை.

புது மெட்ரோ ரயில் மோகம்

டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது.


மனநலம் முக்கியம்

இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர்.


பிட்காயின் பரிதாபம்

ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின் பிளாக் செயின் முயற்சிகளில் பிட்காயின் பயன்பாடு அதிகமாக இருந்தது நகை முரண். 2009இல் அறிமுகமாகி இன்றுவரை பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு சிறப்பாகவே பயணித்து வந்திருக்கிறது பிட்காயின் இந்த ஆண்டும் கூட நம் ஆதார் அட்டையை பிளாக்செயினில் இணைக்கும் வரலாற்று சம்பவம் நடைபெறலாம். இந்தியாவில் இருக்கிறோம். எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம் இல்லையா?

டிஜிட்டல் போராட்டம்

இந்த ஆண்டு நிறைய அரசு ஆதரவாளர்கள் நாம் டிஜிட்டல் உலகில் பார்க்கிறோம். இடது, வலது, மய்யமாக என இவர்களை வரிசைப்படுத்தலாம். பெரும்பாலான போராட்டங்கள் வலைத்தளங்களில் தொடங்கி தெருவைத் தொட்டன. தற்போதை குடியுரிமைத் திருத்த சட்ட மசோதாவும் கூட இன்று கோலமாவு போராட்டம் வரையில் இப்படித்தான் பரவியது.


ரெயின்போ நம் நிறம்


மாற்றுப்பாலினத்தவர்கள் சட்டப்பிரிவு 377 ஐ எதிர்த்துப் போராடி வென்றனர். மாற்றுப்பாலினத்தவர்கள் பல்வேறு துறைகளிலும் கூச்சம் விட்டு உச்சம் தொட்டனர். தன்னை இப்படித்தான் என்று சொல்லிக்கொண்டு பலரும் முன்னே வந்த பெருமைக்குரிய ஆண்டு இது.

காதல் சொல்லிப் பழகு

இந்தியாவின் டேட்டிங் ஆப் ட்ரூலிமேட்லி வெளியானது. அதற்குப்பிறகு உலகப்புகழ்பெற்ற டிண்டர் வெளியானது. ஆக மொத்தம் இணையத்திலும் ஜோடி சேர்த்து பார்க்கும் வேலை தொடங்கியது. இந்தியர்கள் இதிலும் வேகமாக வேலைபார்த்து மகிழ்ந்தனர்.

சிறியதே மகிழ்ச்சி

ஜப்பானிய பெண்மணி மரியோ கோண்டோ, இளைஞர்களை குறைவாக பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக வாழ அட்வைஸ் செய்தார். ஏறத்தாழ அம்மா சொல்லி கேட்காத இளம்பெண்கள் மரியா சொன்னால் தலையாட்டிக்கொண்டு கேட்டு பின்பற்றியது உலக அதிசயம்.

பேசு தங்கமே கேட்போம்

பாட்காஸ்ட் உலகமே பரபரத்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிற துறை. இந்தியாவில் 2015ஆம் ஆண்டு  தொடங்கியது. ஐவிஎம், ஆட்டோமேட்டிக் ஆகிய நிறுவனங்கள் இவ்வகையில் புதிய நிறுவனங்கள். இசை, செய்தி. விளையாட்டு, கதை சொல்வது என பிரித்து மேய்ந்தது இந்தியர்களின் கூட்டம்.


ஜோக் சொல்லுங்க பார்ப்போம்

ஓபன் மைக் போல ஜாலியாக காமெடிகளைப் பேசிச்சிரிப்பதற்கான நகர கிளப் கலாசார உருவாயின. எதற்கு கதைகளைப் பேசி சிரிப்பதற்குத்தான். இது முழுக்க இளைஞர்களுக்கானது. இந்த வகையில் 2010இல் மும்பையில் காமெடி ஸ்டோர் தோன்றியது.

நன்றி - டைம்ஸ் டிச. 29, 19