2020இல் நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்!
giphy |
2020ஆம் ஆண்டு நீங்கள் கேட்கவேண்டிய கேள்விகள்!
இந்த ஆண்டு ட்ரோன் டெலிவரி செயல்படுமா?
ஆப்பிரிக்காவில் ரத்தப்பைகளை எடுத்துச்செல்ல ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எனவே இந்த ஆண்டு அரசின் அனுமதி பெற்று ட்ரோன் சேவைகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
அரசியல் விளம்பரங்கள், போலிச்செய்திகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
இதை மார்க் ஸூக்கர்பெர்க்தான் சொல்லவேண்டும். ஃபேஸ்புக் எங்கெங்கு வளர்கிறதோ அங்கெல்லாம் உள்நாட்டு கலகம், புரட்சி, போராட்டம் என வளர்க்கப்பட்டு நாட்டின் அரசியல் நிலைமை படுமோசமாகி வருகிறது. இதற்கு காரணம், ஃபேஸ்புக் நாட்டை ஆளும் சர்வாதிகார கட்சிகளுடன் சூயிங்கம்மும் வாயும் போல இணைந்து செயல்படுகிறது. இதன்காரணமாக, நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு பாசிச தன்மை வளர்ந்து வருகிறது. இதை நாமே தீர்க்கலாம். எப்படி என்றால் ஃபேஸ்புக் கணக்கை கைவிடுவதன் மூலம். ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி உள்ளது.
நன்றி - வெப் யூசர் இதழ்