சுற்றுலா பயணிகளை கொல்லும் சைக்கோ கொலைகாரர்! - இவான் மிலாட்








Ivan Milat With Guns




அசுரகுலம்

இந்த தொடரில் நீங்கள் ஏற்கனவே அமெரிக்க ஆட்களை நிறைய பார்த்துவிட்டீர்கள். எனவே அந்த அத்தியாயம் இத்தோடு முடிந்தது. இனி உலகம் முழுக்க உள்ள சில முக்கியமான சைக்கோ சீரியல் கொலைகார ர்களை பார்ப்போம்.

இப்போது ஆஸி.யைச் சேர்ந்த இவான் மிலாட்டைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் தொண்ணூறுகளில் இவர் பிரபலம். ஏழு பேர்களை கொன்று புதைத்தார். அதற்கான பெருமை இவானையே சேரும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம். வாங்க. இவான் மிலாட்டை மையமாக வைத்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான விட்டேகர் சின்ஸ் ஆப் தி பிரதர் என்ற நூலை எழுதினார். பின்னாளில் இந்த நூல் திரைவடிவமானது. அதன் பெயர் வோல்ஃப் க்ரீக்.


1944ஆம் ஆண்டு பிறந்தவர் இவான். இவரது தந்தை கடும் முன்கோபி. அதிலும் ரொமான்ஸ் மூடு ஏகத்திற்கும் ஏற, பதினான்கு பிள்ளைகளை பெற்றார் அவரது அம்மா. அதில் வறுமை காரணமாக 13 பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து போனார்கள். குரோஷிய நாட்டுக்கார குடும்பம் இது. அகதிகள் குடும்பம் என்றால் எடுப்பார் கைப்பிள்ளை போலத்தானே? ஆஸி.யின் சிட்னிக்கு வெளியே உள்ள மூர்பேங்கில்தான் வீடு. அங்கு கத்தோலிக்க பள்ளிக்கு இவான் மற்றும் அவர்களின் சகோதர ர்கள் சென்றார். அங்கு சென்று படித்து முன்னேறி... அப்படி விக்ரமன் பட வேகத்திற்கு வாழ்க்கை செல்லவில்லை.அங்குள்ள அதிகாரிகள் சிறுவர்களுக்கு பல்வேறு துப்பாக்கிகள், ஆயுதங்களை கையாள கற்றுக்கொடுத்தனர். சிறப்பாக கற்றுத்தேர்ந்த இவான், அதனை திருடப் பயன்படுத்தினார். சிக்கிக்கொண்டார். இதனால் பதினேழு வயதுக்குள்ளாக சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு சென்று வந்துவிட்டார்.


19 வயதில் அங்குள்ள அண்ணாச்சி கடையை தேட்டை போட முயற்சித்தார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஒரே ஒருவர் மட்டுமே. அது இவருடைய சகோத ர ர் போரிஸ். சாலையில் சென்று கொண்டிருந்த டாக்சி டிரைவரை சுட்டுக்கொல்ல முயற்சித்தார் இவான். எதற்கு என்று கேட்கிறீர்களா? காரணம் தேட அவர் முயலவில்லை. ஆனால் போலீஸ் அவரைப் பிடித்து வாய்மையே வெல்லும் என்று சொல்லி ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைத்தது. இருபத்தி ஐந்து வயதில் வெளியே வந்தார். அப்போதும் சும்மா இருக்காமல் இரு பெண்களை வல்லுறவு செய்ய முயன்றார். பெண்கள் பச்சாவ் என கத்த, மாட்டிக்கொண்டார். ஆனால் போலீஸ் தூங்கி வழிந்ததால் தண்டனையிலிருந்து தப்பிக் கொண்டார். அடுத்து இரு பெண்களையும் கசக்கி தூக்கியெறிந்தார் சடலங்களாக. அதையும் காவல் கண்டுகொள்ளவில்லை.

1984ஆம் ஆண்டு தன் ஜூனியராக இருந்த பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் விரைவிலேயே தன் மாமனாரின் வீட்டை கொளுத்தினார் இவான். பீதியான மனைவி, உடனே விவாகரத்து செய்துவிட்டு ஓடிவிட்டார். அப்போதே அவருக்கு கத்தி துப்பாக்கி மீதான காதல் தொடங்கிவிட்டது.


1992ஆம்ஆண்டு சவுத் வேல்சில் உள்ள பெலாங்லோ காட்டில் இரு சடலங்கள் கண்டறியப்பட்டன. இவைதான் இவானின் முதல் கொலை  இரு பெண்களை கைகளை கட்டி கொன்று போட்டிருந்தார். பின்னர், 98 அடி தள்ளி மற்றொரு சடலம் கிடந்தது. முதலில் எடுத்த சடலங்களை இங்கிலாந்து நாட்டினர் என்று அடையாளம் கண்டுபிடித்தனர். இறந்த பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். அதில் கிளார்க் என்ற பெண்ணின் தலையில் 10 முறை துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. வால்டர் என்ற பெண்ணின் உடலில் மார்பு, முதுகு உட்பட 14 முறை கத்தியால் வெறித்தனமாக குத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர், அங்கு உடல்கள் இல்லை. 1989ஆம் ஆண்டு அங்கு இரு உடல்களை கண்டுபிடித்தது காவல்துறை. இந்த உடல்களிலும் முதுகெலும்பை துளைத்து கத்தி உள்ளே இறங்கி நுரையீரலை பஞ்சராக்கி இருந்தது. மற்றொரு உடலில் கபாலத்தை உடைத்து மரணம் நேர்ந்து இருந்தது. பெரும்பாலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே குறிவைத்து தாக்கினார்.

தொகுப்பு - வின்சென்ட் காபோ

நன்றி - கில்லர்ஸ் நூல்

ஆல் தட் இன்ட்ரஸ்டிங்