நேற்று இன்று நாளை - நாஸ்டாலஜியா நல்லதா?
giphy |
மிஸ்டர் ரோனி
நாஸ்டாலஜியா நல்லதா கெட்டதா?
பொதுவாக நாம் கடந்த காலத்தில் செய்த தில்லுமுல்லுகள், போக்கிரித்தனங்கள், கோமாளித்தனங்கள் இவைதானே இன்று நம்மை வடிவமைத்துள்ளன. அதனால்தான் ஜென் இசட், மில்லினிய இளைஞர்களைக்கூட இறந்த காலத்திற்குள் சென்று பார்க்கும்படி திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இதன்மூலம் கடந்த காலத்தில் நடந்த சமாச்சாரங்களை சற்று கண்கொண்டு பார்க்கலாம். இன்றும் காமெடி என்றால் வடிவேலுவை பேசுபவர்கள் அடுத்து சபாபதி படத்து காமெடியில் சென்று முடிப்பார்கள். காரணம், அந்த பட கலைஞர்கள் இன்றைய கலைஞர்களுக்கு ஊக்குமூட்டுபவர்களாக இருந்திருப்பார்கள்.
பொதுவாகவே வரலாறு தெரிந்தால்தானே வரலாறு படைக்க முடியும் என்று கூறுவார்கள். அதுதான் விஷயம். இதில் எதிர்மறையான விஷயங்களை விட நேர்மறையான சங்கதிகள் நிறைய உள்ளன. எனவே நாஸ்டாலஜியாவுக்கு சென்று வருவது உங்களை புத்துணர்வாக்கும் வாய்ப்பு உள்ளது.
நன்றி - பிபிசி