இடுகைகள்

உஷா உதூப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்

படம்
  பாடகி உஷா உதூப் உஷா உதூப்  பாடகி அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன் பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.  நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா? இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.  பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்? பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.  நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது? இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன