இடுகைகள்

மைக்ரோ மோட்டார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் மைக்ரோ மோட்டார் அமலானது!

படம்
மைக்ரோ மோட்டார் இங்கிலாந்தில் அணுவுலை பகுதிகளில் வேலை செய்வதற்காக மைக்ரோ ரோபோட்களை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த மைக்ரோ ரோபோட்களை இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் தயாரித்துள்ளன. இதனை அரசு பயன்படுத்தவுள்ளது. நீருக்கடியில், மனிதர்களால் செல்ல முடியாத  வாயு அழுத்தமிக்க இடங்களில் மைக்ரோ ரோபோட்டுகள் செயல்படவிருக்கின்றன. சுரங்கம் உள்ளிட்ட இடங்களில் ரோபோட்டுகளை பயன்படுத்துவதற்காக அரசு 26.6 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. பிர்மிங்காம், பிரிஸ்டல், லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுக்கு 7.2 மில்லியன் டாலர்களை அரசு மானியமாக அளித்துள்ளது. ”இம்முறையில் சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை மைக்ரோ ரோபோட்டுகள் சரி செய்யும். இதன்விளைவாக மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். ” என்கிறார் பேராசிரியர் கிரில் ஹோரோஷென்கோவ்.