இடுகைகள்

ஸ்நாக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்நாக்ஸ்கள்தான் எதிர்கால உணவா? மாண்டெல்ஸ் ஆய்வு முடிவுகள் வெளியீடு

ஸ்நாக்ஸ் சாப்பிடு சோற்றை கைவிடு இப்படி முடிவெடுத்தவர்கள் வேறு யாருமில்லை உலகளவில் இந்தியர்கள் இச்சாதனையைச் செய்திருக்கிறார்கள். உணவு நிறுவனமான மாண்டெல்ஸ் செய்த ஆய்வில் இந்தியர்கள் நொறுக்குத் தீனிக்கு முதன்மை இடம் கொடுத்து சோற்றையும், சப்பாத்தியையும் தள்ளி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேற்சொன்ன ஆய்வு பன்னிரண்டு நாடுகளிலுள்ள ஆறாயிரம் பேர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 75 சதவீத இந்தியர்கள் அதுதாங்க எங்க வாழ்க்கை எதிர்கால உணவு கூட என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். 53 சதவீத ஆட்கள் உலகளவில் இதே சத்தியத்தை சிலுவை வைத்து சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் நாள் முழுக்க சிறிது சிறிதாக ஏதேனும் கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக சாப்பாட்டுக்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள் என தங்கள் கம்பெனிக்கான பிடிமானத்தை மாண்டெல்ஸ் கண்டுபிடித்துவிட்டது. தற்போது உலகளவில் உப்பு பிஸ்கெட்டுகளுக்கான சந்தை 60 ஆயிரம் கோடியாக உள்ளது. விரையில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. நன்றி - இடி

அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!

படம்
cheryl masterson/pinterest  உடல்பருமன் ஆபத்து! உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது. பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).  உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்கள் உடல்