இடுகைகள்

சமையல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையலால் காதலில் ஒன்று கூடும் பால்ய கால நண்பர்கள்!

படம்
    ஃபார்ம் டு போர்க் டு லவ் ஆங்கிலம் யூட்யூப் ஆக்சன் காட்சிகள் இல்லாமல் உரையாடல்களை, முரண்களை மட்டும் கொண்ட ஆங்கில திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரித்து வருகிறார்கள். இவற்றில் சில படங்கள், இலவசமாக இணையத்தில் பார்க்க கிடைக்கிறது. அப்படி கிடைத்த படத்தில் ஒன்றுதான் இது. அலைஸ் மையர்ஸ், கிறிஸ்டியன் என இருவரும் சமையல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். கிறிஸ்டியனின் சொந்த வாழ்க்கையில் பெரும் இழப்பை அவர் சந்திக்க, அலைஸை காதலித்தபோதும் ஏதும் சொல்லாமல் பிரிக்கிறார். அலைஸ் படித்து முடித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு மேற்பார்வையாளராக உள்ள சமையல்காரருடன் காதல் உருவாகிறது. சூப்புகளை தயாரித்து தரும் வேலையை செய்து வருகிறார். அப்படியான சூழலில் அவருக்கு உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக இருக்க வெளிநாட்டில் இருந்து அழைப்பு வருகிறது. பிலிப்ஸ் குழுமம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அலைஸ் அங்கு செல்கிறாள். மிகப்பெரிய ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குதான் பள்ளிகால தோழன், முன்னாள் காதலனான கிறிஸ்டியனை மீண்டும் சந்திக்கிறார். கிறிஸ்டியன் சமை...

செஃபின் உதவியாளர் உடலில் புகுந்து தான் இறந்துபோன காரணத்தை தேடும் இளம்பெண் ஆவி!

படம்
  ஓ மை கோஸ்டெஸ் கே டிராமா ராக்குட்டன் விக்கி   சன் என்ற ஹோட்டலில் நா போங் சன் என்ற இளம்பெண் கிச்சன் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்கிறாள். அவள் அந்த வேலைக்கு வர காரணமே செஃப் காங் வூ சன்தான் அவரை அவள் தனது குருவாக காதலனாக பார்க்கிறாள். ஹோட்டலில் வேலை என்றால் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான். அவள் வேலையில் தூங்கி வழிகிறாள். அதற்கு காரணம், அவளால் பேய்களை பார்க்க முடியும் என்பதுதான். தற்கொலையால் இறந்த பேய் ஒன்று ஷின் சூன் ஆ, நா போங் சன்னின் உடலுக்குள் புகுகிறது. தனது இறந்த காலத்தை தனக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயல்கிறது. இதனால் நா போங்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை தொடர் விவரிக்கிறது. இந்த கொரிய தொடர், சற்று ஜாலியாக பார்க்க வேண்டியது என்பதால் பதற்றம் கொள்ளவேண்டாம். சமையல் சார்ந்த சாகச தொடர்.   செஃப் காங் வூ சன், அவனது தங்கை இயுன் ஜீ ஆகிய இருவருமே பிறரால் கேலி கிண்டல செய்யப்பட்டு உருவானவர்கள்தான். அதிலும் காங் , சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவன். அவனது அம்மா வேலைக்கு சென்று வந்தவள் என்பதால், அவளது கையில் சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. எனவே,...

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

படம்
  மோரி சாக்கோ, சமையல் கலைஞர் கலாசாரத்தை சமைக்கும் கலைஞர் மோரி சாக்கோ 30 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார். மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர். ஓமர் சை   மீரா முராட்டி 34 செயற்கை நுண்ணறிவில் தேடல் மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமை...

தனித்தீவில் பனிரெண்டு பணக்காரர்களுடன் இறுதி விருந்து - தி மெனு

படம்
  மெனு ஆங்கிலம் தனியாக ஒரு தீவு. அதில் ஹோவர்தன் எனும் புகழ்பெற்ற உணவகம் உள்ளது. அதனை நடத்தும் சமையல்கலைஞர் பனிரெண்டு ஜோடிகளை   தனது உணவகத்திற்கு விருந்திற்கு அழைக்கிறார். விருந்து நாள் முழுக்க நடைபெறுகிறது. அதில் விருந்தினர்கள் சந்திக்கும் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான் கதை. ஒரு உணவை நாம் சாப்பிடுகிறோம், ருசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற படம், தீவிரமான தொனியில்   காட்சிகளைக் கொண்டிருந்தாலும் அவல நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. ஒருவருக்கு 1250 டாலர்கள் என்ற கட்டணத்தை ஏற்றுக்கொண்டுதான் அங்கு பலரும் வருகிறார்கள். அவர்கள் பலருமே தாங்கள் சாப்பிடுவது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள். அதாவது சாப்பாடு பற்றிய கவனம் குறைந்தவர்கள், அல்லது அறவே கவனம் இல்லாதவர்கள். சமையல் குழு, தலைமை சமையல்காரரின் கைத்தட்டலுக்கு உடல் விறைத்து பிறகு இயல்பாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு ராணுவக்குழு போலவே இயங்குகிறார்கள். அப்படி ஒரு கச்சிதம். படத்தில் வரும் கைதட்டல் ஒருகட்டத்தில் ஹிப்னாடிசம் போல நமக்கும் வேலை செய்வதாக தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் விட ...

உணர்வுகளால் ஆனது சமையல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பெண்ணுடலை அறிய கோட்டை பயணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன் . இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர் அறைக்கு வந்தேன் . குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கு சங்கடம் அளிக்கிற விஷயமாக உள்ளது . வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை . இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும் . திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன் . தஞ்சையைச் சேர்ந்தவர் . வினோத் அண்ணாவைப் போல புகைப்படக்காரர்தான் அவரும் . முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார் . ஓவியம் , புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் . அதுதான் பிழைப்பும் கூட . இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம் . அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள் . சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான் . அதைக்கடந்துதான் வரலாறு , வெங்காயம் எல்லாம் . டிக்கெட் வாங்குவது எல்லாமே டிஜிட்டலாக க்யூஆர் கோட் மூலம்தான் . தரையில் கற்பாளங்கள் , சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதா...

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. ...

உணர்வுகளால் ஆனது சமையல்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  16.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  இங்கு ஞாயிறு. சிறப்பு திரைப்படம் போல சிறப்பு லாக்டௌன். அறையில் அடைந்து கிடப்பது பெரும் அவஸ்தை. ஊருக்குப் பொங்கலுக்குப் போனவர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யும் ஆப்ஷனைப் பெற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். நான் அமேசானில் ஆர்டர் செய்த புத்தகங்கள் வந்துவிட்டன. இரு புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டன. இன்னும் ஒரு புத்தகம் மாத இறுதியில் கிடைக்கும். மூன்றாவது நபரிடமிருந்து அமேஸான் வாங்கிக் கொடுப்பதால், காலதாமதம் என விளக்கம் கொடுக்கிறார்கள்.  ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாத இதழில், நடிகர் நஸ்ரூதின்ஷா பேட்டி படித்தேன். சமகாலத்தைப் புரிந்துகொண்டு ஓடிடி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். நேர்காணலில் நிறைய விஷயங்களை காலப்போக்கில் புரிந்துகொண்ட அனுபவத்தில் பேசியிருந்தார். சினிமாவில் முஸ்லீம்கள் பங்களிப்பு, முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை, பிரிவினை, புதிய இயக்குநர்கள் என அனைத்துக்கும் விளக்கமாக பதில் சொல்லியிருந்தார். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் தீனி. சசி என்பவர் இயக்கிய படம். அதி...

உண்மையா? உடான்ஸா? - விமான எரிபொருளாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்!

படம்
  உண்மையா? உடான்ஸா? சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவி...

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு ...