டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

 




மோரி சாக்கோ, சமையல் கலைஞர்









கலாசாரத்தை சமைக்கும் கலைஞர்

மோரி சாக்கோ 30

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார்.

மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர்.

ஓமர் சை

 

மீரா முராட்டி 34

செயற்கை நுண்ணறிவில் தேடல்

மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமையான ஸ்டார்ட்அப்பிலிருந்து அதை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுப்பதில் அவருக்கும் முக்கியப் பங்குண்டு.

சாட் ஜிபிடி, டால் இ, ஜிபிடி 4 ஆகிய தொழில்நுட்பங்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர். மைக்ரோசாஃப்ட் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.

சத்யா நாதெள்ளா

 

 

 

வெய்மோ அப்பே, சமீர் கோயல்  31,29

அமெரிக்காவில் கடன் பெறுவது அதை அடைப்பது அதன் அடிப்படையில் புதிய பொருட்களை கடனுக்கு வாங்குவது இயல்பானது. அங்கு வாழும் மக்களுக்கு இந்த முறை எளிதானது. ஆனால் அங்கு அகதிகளாக வந்து குடியேறி வாழ்பவர்களுக்கு இது புதிதானது. நெருக்கடி தரக்கூடியது. இதற்காகவே வெய்மோ, சமீர் இணைந்து இசுசு என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

கடன் சார்ந்த தகவல்களை ஒருங்கிணைத்து 50 ஆயிரம் பேர்களுக்கு மேல் உதவியுள்ளது. இந்த கடன் தகவல்கள் இருந்தால் மட்டுமே பிள்ளகளை பள்ளியில் சேர்ப்பது, கார் வாங்குவது, சொத்துகளை அடகு வைப்பது ஆகியவற்றை ஒருவர் செய்ய முடியும். ஸ்டேபில் ஹோம் ஃபண்ட் மூலம் வருமானம் குறைந்த ஏழைக் குடும்பங்களுக்கு இசுசு உதவி வருகிறது.

இன பாகுபாடு இன்றி மக்கள் தங்கள் இனக்குழுவுக்குள் பயன்படுத்தும்படியான நிதி வசதிகளை வழங்கும்படி செய்வதே இசுசுவின் நோக்கமாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளது.

தாரா லா

ஆராய்ச்சியே வாழ்க்கை

ரெனி வெக்ரிஷ்யான் 46

மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் என்ற முறையில் முக்கியமான நோய் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவிகளை வழங்கிவருகிறார். உயரியல் ஆராய்ச்சிகளில் ரெனி காட்டும் அக்கறையும் வழங்கும் நிதியும் சூதாட்டத்தில் பணம் கட்டுவதைப் போலவே இருக்கிறது. கடந்த ஆகஸ்டில், புற்றுநோய் ஆராய்ச்சியில் புற்றுசெல்களை அகற்றி, நல்ல செல்களை பாதிக்காதவாறு உள்ள மருந்துகள், கண்டுபிடிப்புகளை ஆதரவளிப்பதாக ரெனி கூறியுள்ளார்.

ஆலிஸ் பார்க்

கணித கோட்பாட்டில் வித்தகர்

ஜேம்ஸ் மேனார்ட் 36

ஆக்ஸ்ஃபோர்ட் கணிதவியலாளர் ஜேம்ஸ் மேனார்ட். எண் கோட்பாட்டில் செய்த ஆராய்ச்சி அவருக்கு நியூ ஹாரிசன் பரிசு, ஃபீல்ட்ஸ் மெடல் ஆகியவற்றைப் பெற்றுத்தந்துள்ளது. கணிதத்தின் தூய்மை மற்றும் புதுமைத்திறனை மக்களுக்கு காட்டுவதே தனது நோக்கம் என்று கூறி இயங்கி வருகிறார்.

அன்னா கார்டன்

மரபணுக்களை அட்டவணைப்படுத்துபவர்

எரியோனா ஹைசோலி 37

அழிந்த அல்லது அழியும் நிலையில் உள்ள விலங்குகளின் மரபணுக்களை பட்டியலிட்டு அட்டவணைப்படுத்தி வருகிறார் ஆராய்ச்சியாளர் எரியோனா. வட அமெரிக்காவில் வாழ்ந்த மாமூத் யானைகளை இந்த வகையில் உயிரோடு வைத்திருக்க முடியும். 2022ஆம் ஆண்டு எரியோனா ஆசிய யான வகைகளின் மரபணுக்களை பட்டியலிடுவதாக கூறினார். ஆசிய யானை, டோடோ, வங்கப்புலி என அழிந்த, அழியும் நிலையிலுள்ள விலங்குகளை மரபணு பட்டியலிடுதல் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார். இந்த வகையில் விலங்கினங்களை பாதுகாக்கலாம் என்பது சற்று புதுமையானது.

ஜெஃப்ரி குளூகர்

பொருளாதாரத்தில் துணிச்சலான சிந்தனை

இசபெல் வெபர் 35

பணவீக்கத்தின்போது, பொருட்களின் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக்க பெருநிறுவனங்கள் தயங்குவதில்லை. ஆனால், பணவீக்கம் குறையும்போது பல்வேறு காரணங்களை சொல்லி விலையை குறைக்க மறுக்கிறார்கள். இதனால் நாட்டின் பணவீக்க அளவு பெரிய மாறுதலுக்கு உள்ளாகுவதில்லை. மக்கள் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பெருநிறுவனங்கள் எவையும் இதில் விதிவிலக்கு கிடையாது. இசபெல் வெபர் இப்படி நிறுவனங்கள் இயங்குதைப் பற்றி வெளிப்படையாக கூறி விமர்சித்த பொருளாதார வல்லுநர். இதற்கு எடுத்துக்காட்டாக ஃபெட் நிறுவனத்தை அடையாளம் காட்டினார். நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு இசபெல் வெபர் போன்ற பொருளாதார ஆளுமையின் அறிவுறுத்தல்கள் தேவை.

எலிசபெத் வாரன்

டைம் 100 செப்.2023 இதழின் கட்டுரைகளை தழுவியது.


கருத்துகள்