பெண்களை கல்வி கற்க விடாமல் முடக்கும் தாலிபன்கள்-அதிகரிக்கும் இளம்பெண்கள் தற்கொலை

 










தற்கொலை செய்துகொள்வதே மேல் – ஆப்கன் தற்கொலை விவகாரம்

 

மோசமான மதவாத, தீவிரவாத சர்வாதிகாரத்தை மக்கள் அறியாமையால் தேர்ந்தெடுத்தாலும் கூட விளைவு ஒன்றுதான். மக்கள் மெல்ல சாவார்கள். அதுபோல தீயசக்தி கொண்ட அரசியல் தலைமை ஏற்பாடுகளை செய்யும். மக்களும் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாதபடி வாழ்வார்கள். அரசிடம் காசு வாங்கி  பிழைக்கும் ஊடகங்கள், அரசின் தவறுகளை கேள்விகேட்கும் செயல்பாட்டாளர்களை அவதூறு செய்து செய்திகளை வெளியிட்டு ஊடக தர்மத்தை காப்பாற்றுவார்கள்.

2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு  வந்தபிறகு நடக்கும் அலங்கோலம் இதுதான். முழுக்க மத அடிப்படையிலான ஆட்சி என்பதால், கற்காலத்திற்கே நாட்டை கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். 

இந்தியாவின் ஆதரவில் அமெரிக்க படைகள் இருந்தபோது பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. வேலைக்கு சென்றார்கள். சுய தொழில்களை தொடங்கினர். ஆனால், இன்று மேற்சொன்ன அனைத்தையும் ஆப்கன் ஆட்சியாளர்கள் தடை செய்துவிட்டனர். பெண்களை போகப்பொருளாக கருதுவதால், தொடக்கப்பள்ளிக்கு மட்டும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்ய வைத்து உறவினர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இப்படி கட்டாய கல்யாணத்தை மறுக்கும் இளம்பெண்கள் பலரும் ஒரே வழியாக தற்கொலையை  நாடுகிறார்கள்.

 ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக்கு வரும்  முன்னர் தொழில் தொடங்க முடியாத வருத்தம், ஈரானுக்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முடியாத விரக்தி, நோய் என்று அதிகம் தற்கொலை செய்தது ஆண்கள்தான். ஆனால் இப்போது பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொது இடத்தில் நடமாடக்கூட தடை  என நிலைமை  மாறியதில் கடும் மனநிலை குறைபாடுகளுக்கு உள்ளாகிவிட்டனர். பத்தில் ஒன்பது பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள். காசு இருப்பவர்கள் அங்கிருந்து தப்பி வேறு நாடுகளுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அப்படி தப்பிக்க முடியாதவர்கள் மதவாத ஆட்சியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர்.

உலகளவில் ஆண்கள்தான் தற்கொலை செய்துகொள்வதில் முன்னிலை வகிக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம், தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆப்கனில் ஆகஸ்ட் 2021 தொடங்கி ஆகஸ்ட் 2022 வரையிலான காலகட்டத்தில் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆப்கன் அரசு இதுபற்றி முறையான தகவல்களை அளிக்கவில்லை. தனியார் அமைப்புகள், சுகாதார நிறுவனங்கள் செய்த விசாரணையில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. கட்டாய கல்யாணத்தில் மணமகன்கள் பெரும்பாலும் குருட்டு மதவாதியாக, குடி நோயாளி, போதை அடிமையாக இருப்பதே வழக்கம். எனவே, பெண்கள் கல்வி, வேலை அனைத்தையும் தொலைத்துவிட்டு இல்லறவும் இப்படி வதை முகாமாக மாறுகிறதே என தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஸாஹ்ரா நாடெர் – ஸான் டைம்ஸ் ரிப்போர்டர்

கார்டியன் நாளிதழ் 

pixabay

கருத்துகள்