இடுகைகள்

நச்சு வேதிப்பொருட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நச்சு வேதிப்பொருட்கள்

படம்
indiatdy நச்சு வேதிப்பொருட்கள் நாம்  உண்ணும் உணவிலும் நச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றை குறிப்பிட்ட முறையில் சமைத்து சாப்பிடும்போது உடலுக்கு சத்துக்களாக மாறுகின்றன. தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் உண்டு. அவை என்ன என்று பார்ப்போம்.. நாம் பயன்படுத்தும் சோப், ஷாம்பூ, சலவைத்தூள், மரப்பொருட்களுக்கான பாலீஷ், உரங்கள், அமோனியா, மோட்டார் ஆயில், ப்ளீச்சிங் பவுடர் என பல்வேறு பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் உண்டு. இவை சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் கவனமாக கையாள்வது அவசியம். பொதுவாக வேதிப்பொருட்களில் காணப்படும் நச்சு வேதிப்பொருட்கள் அசிட்டால்டிஹைட்(Acetaldehyde), அசிடோன்(Acetone), அக்ரோலின்(Acrolein), புரோமின்(Bromine), குளோரின்(Chlorine), சைனோஜென்(Cyanogen), ஐசோபுரோபைல் ஆல்கஹால்(Isopropyl alcohol), லிமோனென்(l-limonene), ஹைட்ரஜன் பெராக்சைடு(Hydrogen peroxide ) ஆகியவை மேற்சொன்ன பொருட்களில் பகுதிப்பொருட்களாக உள்ளன. thought.co