இடுகைகள்

கொலம்பியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலம்பியாவின் குழந்தை வல்லுறவு கொலையாளி

படம்
  கிராவிடோ, லூயிஸ் ஆல்ஃபிரடோ போதைப்பொருட்கள் பரவலாக விற்கும் நாடான கொலம்பியாவில் வன்முறை சம்பவங்களுக்கும் குறைவில்லை. மக்களைக் கொல்வது, அரசியல்வாதிகளைக் கொல்வது என்பது மழை பெய்வது, வெயில் காய்வது போல தினசரி நடக்கும்   நாடு. 1990களில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்தது. யார் இதை செய்கிறார் என தொடக்கத்தில் பலருக்கும் தெரியவில்லை. கடத்தப்பட்டவர்களில் அதிகம் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் குறைவு. கொலம்பியாவின் போகோட்டாவிலுள்ள மிகுவாலிடோ என்ற மாவட்டத்தில்   காணாமல் போன பிள்ளைகளை தேடத் தொடங்கினர். 1995ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி, 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் தேடுதல் வேட்டை தொடங்கியது. பனிரெண்டு ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை என பதிமூன்று   பிணங்கள்   தோண்டியெடுக்கப்பட்டன. இதில், பிணங்களுக்கு தலைகள் இல்லை. எட்டிலிருந்து பதிமூன்று வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். இறந்தவர்களின் உடல்களில் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இறந்தவர்களை யார் என காவல்துறையால் அடையாளம் கண்டறிய முடியவில்லை. 1998ஆம் ஆண்டு, குழந்தைகளை கொலை   செய்த குற்றவாளி

காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரங்களை இடம்பெயர்த்து நடும் கொலம்பிய வனத்துறை!

படம்
  காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழி - மரங்களை இடம்பெயர்த்து நடலாம்! உலக நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றன. இதனால், பருவகாலங்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர்,  கிரேக் ஓ நீல். இவரும் இவருடைய குழுவினரும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் உள்ள மரங்களை  வேறிடங்களுக்கு இடம்பெயர்த்து வருகின்றனர்.  முதல் பணியாக, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள லார்ச், பைன், யெல்லோ செடார், ஹெம்ஸ்லாக் ஆகிய இன மரங்களைப் பிடுங்குகின்றனர். பிறகு இம்மரங்களை, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியிலிருந்து கனடாவின் தெற்குப்புற யூகோன் எல்லை வரை நடுகின்றனர்.  ஒகனகன் பள்ளத்தாக்கு பகுதியில், காலநிலை மாற்ற பாதிப்பு தொடங்கியுள்ளது. இதனால்  நீர்பஞ்சம், கடும் பனிப்பொழிவு காரணமாக 1995-2015 வரையிலான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. அதை தடுத்து மர இனங்களைப் பாதுகாக்கவே இடம்பெயர்த்து நடுகின்றனர். . மரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொல