காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரங்களை இடம்பெயர்த்து நடும் கொலம்பிய வனத்துறை!

 












காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய வழி - மரங்களை இடம்பெயர்த்து நடலாம்!






உலக நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்து வருகின்றன. இதனால், பருவகாலங்களின் இடைவெளியில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர்,  கிரேக் ஓ நீல். இவரும் இவருடைய குழுவினரும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் உள்ள மரங்களை  வேறிடங்களுக்கு இடம்பெயர்த்து வருகின்றனர். 

முதல் பணியாக, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள லார்ச், பைன், யெல்லோ செடார், ஹெம்ஸ்லாக் ஆகிய இன மரங்களைப் பிடுங்குகின்றனர். பிறகு இம்மரங்களை, அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியிலிருந்து கனடாவின் தெற்குப்புற யூகோன் எல்லை வரை நடுகின்றனர். 

ஒகனகன் பள்ளத்தாக்கு பகுதியில், காலநிலை மாற்ற பாதிப்பு தொடங்கியுள்ளது. இதனால்  நீர்பஞ்சம், கடும் பனிப்பொழிவு காரணமாக 1995-2015 வரையிலான காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. அதை தடுத்து மர இனங்களைப் பாதுகாக்கவே இடம்பெயர்த்து நடுகின்றனர். . மரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா வனத்துறை, ஒகனகன் பள்ளத்தாக்கு காடுகளிலுள்ள மரங்களை இடம்பெயர்த்து நடும் திட்டத்தைத் தொடங்கியது. 

இதுவரையில், 15 மர இனங்களைச் சேர்ந்த 1,52,376 மரக்கன்றுகளை, 48 இடங்களில் கிரேக் ஓநீல் குழுவினர் நட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு அசிஸ்டட் மைக்ரேஷன் அடாப்டேஷன் டிரையல் (Assisted Migration Adaptation Trial) என்று பெயர்.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள 60 சதவீத இயற்கைப் பரப்பு, அதன் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஆதாரம். 





national geographic may 2022

alejandra borunda

https://forestgeneticsbc.ca/adaptation/

https://www.vice.com/en/article/yp3daj/how-british-columbia-is-moving-its-trees-assisted-migration-larch

https://wildfiretoday.com/2016/01/29/british-columbia-using-assisted-migration-to-help-forests-keep-up-with-climate-change/

https://forestry.ubc.ca/faculty-profile/sally-aitken/

https://pea.org/node/3155

images - pinterest

Thanks - dinamalar

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்