பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

 











கேள்வியும் பதிலும்!

சூழலில் கார்பன் முக்கியமா?

கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. 

வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு. 

படிம எரிபொருட்கள் எவை?

பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர். 

https://climatekids.nasa.gov/carbon/



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்