இடுகைகள்

ஜீன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல