இடுகைகள்

டைம் இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! - டைம் வார இதழின் பரிந்துரை

படம்
 2021இல் சிறந்த கட்டுரை நூல்கள் எ லிட்டில் டெவில் இன் அமெரிக்கா நேஷனல் புக் அவார்ட் பட்டியலில் இடம்பெற்ற நூல் இது. ஹனிப் அப்துராகிப் கருப்பர்கள் பற்றியும் கலாசார வேறுபாடுகளையும் எழுதியுள்ளார். கவிதையும் கட்டுரையும் சேர்ந்த வடிவமாக கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நூலில் அமெரிக்காவின் வரலாறும் பேசப்பட்டது.  கிரையிங் என் ஹெச் மார்ட் மிச்செல் ஸானர், ஜப்பானிஸ் பிரேக்ஃபாஸ்ட் எனும் இசைக்குழுவை நடத்தி வந்தவர். தனது 25 வயதில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குப்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நூலாக எழுதியிருக்கிறார். கொரிய கலாசாரத்துடனான தொடர்பு, அடையாளம் ஆகியவற்றைப் பற்றி தேடி அவர் அடையும் விஷயங்களை நூலாக மாற்றியிருக்கிறார்.  இன்விசிபிள் சைல்ட் ஆண்ட்ரியா எலியட் என்ற நிருபர், தசானி என்ற சிறுமியைப் பார்க்கிறார். நியூயார்க் நகர காப்பகத்தில் அந்த சிறுமி வாழ்கிறார். அமெரிக்காவில் நிலவும் பாகுபாடு, வீடு இல்லாத நிலை, இனவெறி ஆகியவற்றை தசானி என்ற சிறுமியின் வாழ்க்கை வழியே ஆண்ட்ரியா பிரமாதமாக எழுதியுள்ளார்.  ஆப்டர்ஷாக்ஸ் நாடியா ஆவுசு எழுதிய சுயசரிதை இது. தான்சானியா

இளம் வயதினருக்கான நூல்கள் 1993-2000

படம்
  தி கிவ்வர் லூயிஸ் லோவ்ரி பனிரெண்டு வயதான ஜோனாஸ் பிரச்னை, வெறுப்பு, வலி இல்லாத உலகத்தில் வாழ்ந்து வருகிற பாத்திரம். மெல்ல அவனுக்கு நினைவுகள் கிடைக்கும்போது அவனது வாழ்க்கை மாறுகிறது. வண்ணமும், காதலும் இல்லாத வாழ்க்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இதனை அவன் அறிந்துகொள்வதுதான் நாவலின் கதை. 1997 எல்லா என்சேன்டட் கெயில் கார்சன் லெவைன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் எல்லா, எப்படி தன்னைத்தானே உணர்ந்துகொண்டு வாழ்கிறாள், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை.  1998 ஹோல்ஸ்  லூயிஸ் சாச்சர் க்ரீன் லேக் எனும் பகுதியில் தவறு செய்த சிறுவர்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டேன்லி யெல்னட்ஸ் என்ற பதினான்கு வயது சிறுவன், தான் செய்யாத தவறுக்கு அங்கு தண்டனை பெற்று வருகிறான். அவனும் நண்பர்களும், அங்கிருந்து தப்பிக்க குழி ஒன்றை தோண்டுகின்றனர். அதன் வழியாக அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் கதை.  1999 ஆங்கஸ் தோங்க்ஸ் அண்ட் ஃபுல் ஃபிரான்டல் ஸ்னாக்கிங் லூயிஸ் ரென்னிசன் இளைஞர்களுக்கான கிளாசிக் நூல் இது. பதினான்கு வயது ஜார்ஜியாவின் காதல், பள்ளி வாழ்க்கையை பேசுகிற