இடுகைகள்

போராளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சுத்தன்மையே

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐ

யூத இனத்தைச் சேர்ந்த மூன்று போராட்டக்காரர்கள்! இன ஒழிப்புக்கு எதிர்ப்பு, மரங்களைக் காக்கும் முயற்சி, எல்ஜிபிடியினருக்கான கஃபே!

படம்
                  தாலியா வுடின் இவர் சூழல் மற்றும் சமூக நீதிக்காக போராடி வருகிறார் . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் . தற்போது இவர் மரத்தில் வசித்து வருகிறார் . இங்கிலாந்து அரசு அதிவேக ரயில் சேவைக்காக இருப்புப்பாதை அமைக்கவிருக்கிறார்கள் . காலன் வேலி எனும் அந்த இடத்தில் பிற சூழலியலாளர்களுடன் இணைந்து தொன்மையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் தாலியா ஈடுபட்டுள்ளார் . லண்டனுக்கு வெளியிலுள்ள இந்த இடத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகிறார்கள் . தாலியா வுடனின் பெற்றோர் இருவருமே சூழலியல் போராட்டக்கார ர்கள் . இதனால் இளம் வயதில் சூழல் தொடர்பான அக்கறை தாலியாவுக்கு வந்துவிட்டது . சூழலியல் தொடர்பான அக்கறை தனியாக எதையும் கற்பது போல இல்லை . அது என்னுடைய வாழ்வினூடே இருந்து வந்தது . நான்குவயதில் தாலியாவின் தந்தை நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானார் . இத்தனைக்கும் அவர் புகைப்பழக்கம் இல்லாதவர் . இதனால் தாலியா காற்று மாசுபாடு பற்றிய கவனம் கொண்டார் . இங்கிலாந்தில் மட்டும் 64 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டிற்கு பலியாகிறார்கள் . இவரத