இடுகைகள்

ஜேசன் ஸ்டாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் இறப்பில் தொடங்கும் பழிக்குப்பழி வன்மம்!

படம்
              ரேத் ஆப் தி மேன் கய் ரிட்சி பிரெஞ்சில் வந்த படனத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள் . படத்தின் கதை எளிமையானதுதான் . அமெரிக்காவில் உள்ள கேங்ஸ்டர் ஒருவரின் மகனை முன்னாள் கொள்ளையர்களின் குழு கொன்றுவிடுகிறது . இதற்கு கேங்ஸ்டர் தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை . படத்தின் கதையை நகர்த்தி செல்வதில் ஒளிப்பதிவும் இசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன . மென்மையாக தொடங்கும் கிடார் கம்பிகளின் மீட்டலே படத்தின் ரத்த வேட்கையான சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கிறது . ஜேசன் ஸ்டாதம் இருக்கிறார் படத்தில் . அப்புறம் வேறென்ன வேண்டும் என இயக்குநர் நினைத்திருக்கிறார் . அதுதான் படத்திற்கு பலவீனமாகிறது . அனைத்து சண்டைக்காட்சிகளுமே மிகவும் ஜென்டில்மேன்தனமாக உள்ளது . துப்பாக்கியில் சுட்டு வரவு செலவு தீர்ப்பதாக இருப்பதால் , சில சமயங்களில் ஆக்சன் காட்சிகளில் ஈர்ப்பு குறைகிறது . நேருக்கு நேரான மோதல்களே இல்லாமல் இருப்பது ஜேசன் படங்களை பார்ப்பவர்களுகு இழப்பாக தோன்றும் . போர்ட

காதலியை மீட்க மூன்று கொலைகளை செய்ய ஒத்துக்கொள்ளும் மெக்கானிக்! - மெக்கானிக் ரீசர்கேஷன்

படம்
        மெக்கானிக் -ரீசர்கேஷன்   மெக்கானிக் -ரீசர்கேஷன் ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள படம். இதில் கதை என்று தனியாக ஒன்றைச் சொல்லவேண்டுமா? காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் குணம் கொண்டவர் பிஷப் - ஜேசன் ஸ்டாதம். ஆனால் அவரை கட்டாயப்படுத்தமுடியாது. அவரே விரும்பினால்தான் கொலைகளை அசைன்மென்டாக ஏற்பார். இந்த நிலையில் அவரை வளைக்க ஜெசிகா ஆல்பாவை கம்போடியாவிலிருந்து கொண்டுவந்து கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் ஜேசன் அதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரம் ஜெசிகாவைப் பற்றி ஆராய்ந்து பயோடேட்டாவை சேகரித்து வைத்துவிட்டு காதல் செய்து மிசிசிபி ந்தி பாட்டுக்கு ஆடி சங்கமமே ஆகிவிடுகிறார்கள். கிரெய்ன் என்ற அவனது பால்யன நண்பன்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். அவனை பார்த்து ஓடாமல் அவனை கொன்றுவிடலாம் என முடிவுக்கு ஜேசன் வரும்போது ஜெசிகாவை கடத்திச்சென்று விடுகிறார்கள். கிரெய்ன் சிம்பிளாக மூன்று கொலைகளை செய்யவேண்டும் வந்தால் உன் காதலி உனக்கு. என சொல்லுகிறான். ஜேசன் அவனை நம்பி அசைன்மென்டுக்கு போனாரா, கொன்றாரா என்பதை திகுதிகு வேகத்தில் படமாக எடுத்திருக்கிறார்கள். ஜேசன் ஒவ்வொருவரையும் கொலை செய்ய செய்ய

மகளைப் பாதுகாக்க போதை மாபியாவோடு போராட்டம்! - ஹோம் ஃபிரன்ட்

படம்
ஹோம்ஃபிரன்ட் -2013 ஆங்கிலம் இயக்கம் ஹோம் ஃபிளெடர் திரைக்கதை சில்வஸ்டர் ஸ்டாலோன் மூலம் - ஹோம்ஃபிரன்ட் - சக் லோகன் ஒளிப்பதிவு  தியோ வான் டி சாண்டே இசை மார்க் இஷாம் அமெரிக்காவில் போதை கும்பலை பிடிக்கும் ஏஜெண்டாக இருக்கும் போலீஸ்காரர், தனது ஆபரேஷன் ஒன்றில் தோல்வியைத் தழுவ அதன் விளைவாக ஒரு உயிர் பலியாகிறது. இதன் விளைவாக, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் செல்ல மகளோடு அமைதியாக சிறு நகரம் நோக்கி சென்று வீடுகட்டி வாழ்ந்து வருகிறார். ஆனால் அங்கும் அவரை சீண்டுகிற சூழ்நிலை திரும்ப அவரை துப்பாக்கி எடுக்க வைக்கிறது. அவரது மகளைக் காப்பாற்ற இதைச் செய்கிறார். இம்முறை பழைய பகையோடு உள்ளூர் எதிரிகளும் கைகோக்க என்னவானது போலீஸ்காரரின் நிலை மை என்பதுதான் படம். ஆஹா ஜேசன் ஸ்டாதம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தன்னால் ஒரு உயிர் அநியாயமாக போனதை நினைத்து வேலையை விட்டு விலகியவர். மகளுக்காக அமைதியாக வாழ்கிறார். ஆனால் மகளுக்கு சொல்லிக் கொடுத்த தற்காப்புக்கலை அவருக்கு உள்ளூர் பகையை வலுவாக்குகிறது. கோபம், பொறுப்பு, வெறுப்பு, வன்மம், மகிழ்ச்சி என அனைத்திலும் அடக்கி வாசித்திருக்கி