காதலியை மீட்க மூன்று கொலைகளை செய்ய ஒத்துக்கொள்ளும் மெக்கானிக்! - மெக்கானிக் ரீசர்கேஷன்

 

 

 

 

Mechanic: Resurrection | Netflix

மெக்கானிக் -ரீசர்கேஷன்

 

மெக்கானிக் -ரீசர்கேஷன்

ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள படம். இதில் கதை என்று தனியாக ஒன்றைச் சொல்லவேண்டுமா?

காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் குணம் கொண்டவர் பிஷப் - ஜேசன் ஸ்டாதம். ஆனால் அவரை கட்டாயப்படுத்தமுடியாது. அவரே விரும்பினால்தான் கொலைகளை அசைன்மென்டாக ஏற்பார். இந்த நிலையில் அவரை வளைக்க ஜெசிகா ஆல்பாவை கம்போடியாவிலிருந்து கொண்டுவந்து கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் ஜேசன் அதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரம் ஜெசிகாவைப் பற்றி ஆராய்ந்து பயோடேட்டாவை சேகரித்து வைத்துவிட்டு காதல் செய்து மிசிசிபி ந்தி பாட்டுக்கு ஆடி சங்கமமே ஆகிவிடுகிறார்கள். கிரெய்ன் என்ற அவனது பால்யன நண்பன்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். அவனை பார்த்து ஓடாமல் அவனை கொன்றுவிடலாம் என முடிவுக்கு ஜேசன் வரும்போது ஜெசிகாவை கடத்திச்சென்று விடுகிறார்கள். கிரெய்ன் சிம்பிளாக மூன்று கொலைகளை செய்யவேண்டும் வந்தால் உன் காதலி உனக்கு. என சொல்லுகிறான். ஜேசன் அவனை நம்பி அசைன்மென்டுக்கு போனாரா, கொன்றாரா என்பதை திகுதிகு வேகத்தில் படமாக எடுத்திருக்கிறார்கள்.

Jessica Alba in new still from upcoming action flick ...


ஜேசன் ஒவ்வொருவரையும் கொலை செய்ய செய்யும் திட்டங்களை ஹிட்மேன்களுக்கு பாடமாகவே வைக்கலாம். பொறியியல் மாணவன் கூட அத்தனை படங்களை வரைந்து வைத்து உழைத்திருக்கமாட்டான். அவ்வளவு உழைப்பு உழைப்பவர், காதலியை காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப்போய் திரும்பும் காட்சி நம்பவே முடியலியேப்பு......

கடைசி காட்சி முக்கியமான டிவிஸ்ட்தான். ஜேசன் தப்பிவிடுகிறார்தான் எப்படி என்று காட்டியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? அதுதான் அம்சமான இயக்குநருக்கு அழகு.

திகுதிகு வேகம்

கோமாளிமேடை டீம்
 

 சினிமா விமர்சனம், ஆங்கிலம், ஜேசன் ஸ்டாதம், ஜெசிகா ஆல்பா, கொலை, குற்றம், காதல், மெக்கானிக்

கருத்துகள்