இம்பேக்ட் 50! - சாதனைப்பெண்கள்- மலையாள மனோரமா நிறுவனத்தை டிஜிட்டல்மயப்படுத்திய பெண்மணி! - மரியம் மேத்யூ
மரியம் மேத்யூ
இயக்குநர், மனோரமா ஆன்லைன்
1997ஆம் ஆண்டு மலையாள மனோரமாவின் இணையபதிப்பு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 36 மில்லியன் மக்கள் அதன் வருகைதரும் பார்வையாளர்களாக உருவாகியுள்ளனர். இந்த வளர்ச்சிக்கு பின்னால் மரியம் மாமன் மேத்யூவின் அர்ப்பணிப்பான உழைப்பு உள்ளது. இவரது தலைமையின் கீழ் மனோரமா ஆன்லைன் நிறுவனம் பல்வேறு துறை சார்ந்து 30 சேனல்களை உருவாக்கியுள்ளது. மரியம் உருவாக்கிய சில தனித்துவமான சேவைகளை பார்ப்போம். எம்4மேரி என்ற வலைத்தளத்தை மலையாளிகள் தங்கள் ஊரில் வரன் பார்ப்பதற்காக உருவாக்கினார். இந்த வலைத்தளம் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், இதன் எளிமையான வடிவமைப்பு, சிறப்பாக ஆப்சன்கள் ஆகியவற்றை காரணமாக சொல்லுகிறார்கள். ஹலோ அட்ரஸ் என்ற நிலம் வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்துகிறார்.க்விக்டாக் எனு்ம் சேவை, கேரளத்திலுள்ள மருத்துவர்களிடம் அப்பாய்ண்மெட் வாங்கித் தரும் சேவையை செ்ய்து வருகிறது. இவை தவிர க்விக் சர்ச் என்ற பெயரில் உள்ளூர் வணிக நிறுவனங்களை எளிதாக கண்டுபிடிக்கு உருவாக்கியுள்ளார். மரியம் மேத்யூவின் நிறுவனம் இன்மா மீடியா விருது 2020 வென்றுள்ளது. மனோரமாவின் செய்தி செயலியும் 2019ஆம் ஆண்டு வான் இ்ப்ரா சவுத் ஆசியன் விருது வென்றுள்ளது.
மரியம் மேத்யூ, கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். டில்லியில் உள்ள செய்ன்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜே.பி மோர்கன் சேஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான மரியத்திற்கு, அதிக தூரம் ஓடுவது என்றால் மிகவும் இஷ்டமாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக