புதுமையான ஓவியர், ஓலிம்பிக்கில் அரசியலை வென்ற தடகள வீராங்கனை! - டைம் 2019 செல்வாக்கு பெற்ற சாதனையாளர்கள்

 

 

 

 

ஓவியர் டேவிட் ஹாக்னி

 

 

 

டேவிட் ஹாக்னி


அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு கலிபோர்னியாவுக்கு டேவிட் நகர்ந்தபிறகு பாப் ஆர்ட்டில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினார். இதன் காரணமாக, இவரது பாப் ஆர்ட் ஓவியங்கள் 90 மில்லியன் டாலர்கள் விலைக்கு விற்றுள்ளன. இந்த வகையில் வாழும் கலைஞர்களின் அதிக விலைக்கு விற்ற ஓவியங்கள் இவருடையதுதான்.


பல்வேறு கலைஞர்களின் ஓவியங்களின் தாக்கம் டேவிட்டின் ஓவியங்களின் உண்டு. முப்பரிமாண தன்மை கொண்ட பல்வேறு வித நிறங்களின் தாக்கம் இவரது ஓவியங்களின் சிறப்பம்சம். டேவிட்டின் ஓவியங்கள், அவரது ஆதர்சமாக நினைக்கும் வான்காவின் ஆம்ஸ்டெர்டாம் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது ஓவியங்களை பரிசோதனை ரீதியாக இப்போது மாற்றிக்கொண்டுவிட்டார். இதனால் இவரது பரிசோதனை ஓவியங்களை டேப்லட், வீடியோ என பலரும் பார்க்க முடியும். இது இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான முறை என்று கூட கருதலாம்.


தனது ஓவியங்களில் சிறந்த கலைஞர்களின் பகடி செய்யும் தன்மையை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். உலகை புதிதாக பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தை டேவிட்டின் ஓவியங்கள் பார்வையாளர்களுக்குத் தருகின்றன. வண்ணங்களை பயன்படுத்தும் நுணுக்கமும், நுட்பமும் பல நூறு புதிய பார்வையாளர்களை இன்றும் ஈர்த்துவருகிறது. அதற்கு ஈடுகொடுத்து புதிய வகை ஓவியங்களை உருவாக்கியபடியே உள்ளார் டேவிட் ஹாக்னி.


எட்வின் பெக்கர்.





Caster Semenya set to run 3000m in US Diamond League | Newshub

caster semanya





காஸ்டர் செமன்யா


ஒலிம்பிக் விளையாட்டுகளில் உள்ள சிக்கல், தடகளத்தில் சாதனை செய்பவர்களின் உடலில் பயிற்சி காரணமாக ஹார்மோன்களின் மாற்றம் ஏற்படுவதுதான். காஸ்டர் செமன்யாவுக்கும் அப்படித்தான் நடந்தது. இதற்காக அவரின் சாதனைகளை பிழை என்று உதறித்தள்ளிவிட முடியாது. ஒலிம்பிக் கமிட்டி காஸ்டர் செமன்யாவை பெண் என்று வரையறுத்துள்ளது. ஆனால் அவரது உடலில் உள்ள ஹார்மோன்கள் பெண்ணின் உடலில் இருப்பதை விட அதிகமாக உள்ளது.


அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அவர் பெண்களுக்கான விளையாட்டில் விளையாடி வென்றவை அனைத்தும் உயிரியல்ரீதியான பலன்கள் என்று சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். அது தவறானது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான இவர் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அவர் ஆண், பெண் என்ற பாலினம் சார்ந்து எப்படி வென்றிருக்க முடியும்? இதன் மூலம் அவரது கடின உழைப்பை அவதூறு செய்கிறார்கள். 1991ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று தென் ஆப்பிரிக்காவில் பிறந்த காஸ்டர் செமன்யா, அவரது நாட்டில் பலரும் பின்பற்றக்கூடிய அளவு சாதனை செய்த தடகள வீரர் என்ற புகழை யாராலும் அழிக்க முடியாது.


எட்வின் மோசஸ்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்