சூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள் டார்ஃபார்ம்! - அன்னாசிப்பழம் மூலம் உருவாகும் புதிய பைக்

 

 

 

 https://cdn-2.returnofthecaferacers.com/wp-content/uploads/2019/07/tarform-electric-motorcycle-1.jpg

 

 

 

அன்னாசிப்பழ பைக்!



பொதுவாக மோட்டார் சைக்கிள்களை எதில் செய்வார்கள்? இரும்பு, எஃகு, ஆகியவற்றில்தானே? ஆனால் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று அதனை இயற்கையான பொருட்களிலிருந்து பெறும் பொருட்களை வைத்து செய்ய முயல்கிறது. எப்படி என்று பார்ப்போம். பைக்கில் வேறு என்ன பொருட்களைப் பயன்படுத்துவோம். இரும்பு, தோல், ரப்பர் போன்றவைதானே இங்கு ஆச்சரியகரமான அன்னாசிப்பழம், பாசி, விதைகள் ஆகியவற்றை ப் பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்த்தால் நான் ஏதோ வீகன் சாலட் பற்றி சொல்லப்போகிறேன் என்று நீங்கள் நினைக்க கூடும். இல்லவே இல்லை. நான் உண்மையில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு பற்றித்தான் சொல்ல வந்தேன்.

அமெரிக்காவின் ப்ரூக்ளினைச்சேர்ந்த டார்ஃபார்ம் என்ற நிறுவனம்தான் ஜீரோ வேஸ்ட் என்ற கான்செப்டுடன் வந்திருக்கிறது.


இது நாளைக்கான சூழலுக்கு உகந்த மோட்டார் சைக்கிள் என்று புன்னகைக்கிறார் டாரஸ் கார்சுவிக். எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான இதன் அலுமினிய பாகங்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் தன்மை கொண்டவை. இதன் பெயிண்ட் முழுக்க பாசிக ளிடமிருந்து பெறப்பட்டவை. பிற பகுதிகள் அன்னாசி மற்றும் சிலவகை விதைகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும். அதாவது இவ ற்றிலிருந்து பெறப்படும் ஃபைபர்களிலிருந்து பைக்கை எடுத்து உருவாக்கி இருக்கிறார்கள்.


24 ஆயிரம் டாலர்கள் முதல் 24 ஆயிரம் டாலர்கள் வரை மோட்டார்சைக்கிளின் விலை செல்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்களுக்கான ஆர்டர் இப்போது 1500 வரை கிடைத்துவிட்டது. இதில் 50 பைக்குகளை மட்டும் தனித்துவாக தயாரித்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பைக்குகள் பெரும்பாலும் நம் ஊரில் புகழ்பெற்ற ராஜ்தூத், ராயல் என்பீல்டு கிளாசிக் இருக்கும் அல்லவா? அந்த வகையில் கிளாசிக் வின்டேஜ் பைக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.


டாரஸ் முதலில் பெட்ரோல், டீசல் மோட்டார் சைக்கிள் என்றுதான் யோசித்தார். ஆனால் அப்போது டெஸ்லா தனது இ கார்கள் மூலம் துறையை மாற்றிக்கொண்டிருந்தது. இதனால் அதனை தனது இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு தனது மோட்டார் சைக்கிளுக்கான புரோடோடைப்பை உருவாக்கிவிட்டார். இதற்கான மார்க்கெட் இப்போது குறைவாக இருந்தாலும் விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், மில்லினிய இளைஞர்கள் பலரும் 70 சதவீதம் பேர் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை விரும்பத் தொடங்கியுள்ளனர்.

பினான்சியல் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்