இந்தி பார்வையாளர்களின் மனநிலையை மாற்றிய தொலைக்காட்சி இயக்குநர்! - மனிஷா சர்மா
மனிஷா சர்மா வயாகாம் 18 |
இம்பேக்ட் 50!, சாதனைப் பெண்கள்,
மனிஷா சர்மா
மூத்த கருப்பொருள் அதிகாரி(இந்தி), வயாகாம் 18
கலர்ஸ் டிவியை அனைவரும் பார்க்கும் டிவி சேனலாக, பல்வேறு சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மாற்றியவர் என்று மனிஷாவை அறிமுகம் செய்யலாம். சீரியல்கள் அல்லாத பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று உருவாக்கிய பெருமை கொண்டவர் மனிஷா. கலர்ஸ் டிவியில் சோட்டி சர்தானி, பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொடங்கி 2019இல் மட்டும் 60 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கலர்ஸ் பக்கம் இழுத்தவர் மனிஷா. '''2019ஆம் ஆண்டு உண்மையில் எனக்கும் எங்கள் குழுவிற்கும் கடினமான ஆண்டு. நாங்கள் சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பாடுபட்டு உருவாக்கி கலர்ஸ் டிவியின் வருமானத்தை அதிகரித்துள்ளோம். டிவியைப் பொறுத்தவரை அதன் நிகழ்ச்சிகளிலுள்ள கருத்து கதை ஈர்த்தால் மட்டுமே பார்ப்பார்கள். நாங்கள் இதனால் சரியில்லாத சீரியல்களை நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளோம். காரணம், இணையம் இன்று தொலைக்காட்சிக்கு மாற்றாக உள்ளது. டிவி பிடிக்கவில்லையென்றால் ஒரு பட்டன் அழுத்தினால் இணையத்திற்கு செல்லமுடியும் வசதி டிவிகளில் வந்துவிட்டது என்கிறார் மனிஷா.
நாகினி, பிக் பாஸ், சக்தி என பல்வேறு நிகழ்ச்சிகள் கலர்ஸ் டிவியை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க வைத்திருக்கின்றன. வருமானத்தையும் பெருக்கியுள்ளன. ஐ்பா விருதுகள்,ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்வை கலர்ஸ் ஒளிபரப்பியது அதனை இன்னும் பிரபலமாக்கியது. டிவியின் ஐகான் தொடராக பிக்பாஸ் 13 வது சீசனாக தொடரவிருக்கிறது. ;நாகினி தொடரும் நான்காவது சீசனில் கால் வைக்கிறது. இந்தி பார்வையாளர்களுக்கு பல்வேறு மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்கி கலர்ஸ் டிவியை தனித்துவமாக்கியதில் மனிஷா சர்மாவின் பங்கு முக்கியமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக