ஆடலாம் ப்ரோ சின்னதா ஒரு டான்ஸ்! - புகழ்பெற்ற வெரைட்டியான டான்ஸ் வகைகள் இவை!
cc |
டான்ஸ் ஆடலாமா?
கோவிட் -19 பாதிப்பு காரணமாக பலரும் வீட்டில் ஃபேமிலி டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் நேரம் இது. இப்போதே டான்ஸ் வகைகள் சிலவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால் பின்னால் பார்ட்டியில் பளபளக்கலாம் அல்லவா?
சல்சா - க்யூபா
க்யூபாவில் தோன்றிய டான்ஸ் வகை. உங்கள் கைகளில் காதலி இருக்கிறாரா, மனைவி இருக்கிறாரா என்பதைப் பொறுத்து நீங்கள் இந்த டான்ஸ் வகையில் ஸ்மூத், ஸ்பீட் என பல்வேறு வெரைட்டிகளை காண்பிக்கலாம். க்யூபாவில் உள்ள சீட்டாட்ட கிளப்புகள், கம்யூனிட்டி அரங்குகளில் பிரபலமான டான்ஸ் இது. இதற்கான ஆப் உங்கள் பிளே ஸ்டோரில் கிடைக்கும். தரவிறக்கி டான்ஸ் ஆடுங்கள்.
கிசோம்பா - அங்கோலா
நெருக்கமாக ஆடும் டான்ஸ் இது. காதல் காதல் சார்ந்தவர்களும் ஆடவேண்டிய டான்ஸ் இது. நிதானமான அசைவுகள், மெல்லிய காலடிகள் என ஆடுவதால் இளைஞர்களை விட மூத்தவர்களுக்கு பிடித்தமானது. அனைத்து வகை கிளப்புகளிலும், பார்ட்டிகளிலும் நுட்பமாக ஆடப்படுகிறது.
சம்பேட்டா - கொலம்பியா
கொலம்பியாவின் கடற்கரையோரம் உருவான டான்ஸ். டான்ஸ் ஆடும் பெண் இணையை தூக்கிப்போட்டு உருட்டி எடுத்து ரோலிங்கில் போம்மா என்று சொல்லி விலக்கி விட்டு ஜடேஜா போல கேட்ச் செய்து என நிறைய விஷயங்கள் இந்த டான்ஸில் உள்ளது. கற்கும்போது காதலர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி வெடிக்கலாம். யூடியூபில் இதனைக் கற்றுக்கொடுக்க நிறைய சேனல்கள் உண்டு. தமனின் டிரம்ஸ் பீட்தான் இதன் டான்ஸ் அடிப்படை. எனவே கற்றுக்கொள்ளுங்கள். காதல் கொள்ளுங்கள்.
லைன் டான்ஸ்
அமெரிக்கா - ஐரோப்பா
இங்கிலாந்து நாட்டுப்புற பாடல்களிலிருந்து உருவான டான்ஸ் வகை. அமெரிக்கா, இங்கிலாந்துகளில் உள்ள பார்களில் இந்த டான்ஸ் வெகு பிரபலம்.
போல்கா - செக் நாடு
பீர் கொடுக்கும் பார்களில் ஜோடிகளாக குதித்து இந்த டான்ஸை ஆடுகிறார்கள் எங்கே என்று கேட்கிறீர்களா? கிழக்கு ஐரோப்பாவில்தான். நல்ல விசாலமான இடம் இருந்தால் டான்ஸ் ஆடுவதற்கு வசதியாக இருக்கும். மேற்சொன்ன அனைத்து டான்ஸ் வகைகளுக்கும் யூடியூபில் சேனல்கள் உண்டு. பார்த்து கவனமாக ஆடிப்பழகிக்கொள்ளுங்கள. பொதுமுடக்கம் முடிந்தபிறகு அசத்தலாம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக