இம்பேக்ட் 50 - சாதனைப் பெண்கள்! பெண்களுக்கு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்! - சுக்லீன் அனேஜா
சுக்லீன் அனேஜா
ஆர்பி ஹைஜீன் ஹோம் தெற்கு ஆசியா, விநியோக இயக்குநர்
அனேஜா இதுவரை யுனிலீவரின் பல்வேறு பிராண்டுகளுக்கு விற்பனை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இத்துறையில் அவருக்கு 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. தற்போது சுகாதாரம் தொடர்பான ரெக்கிட் பென்கிஸர் நிறுவனத்தின் பல்வேறு பொருட்களை சந்தையில் விற்று வருகிறார். இவரின் ஹார்பிக், டியூரெக்ஸ் விளம்பரங்கள் பரவலாக பேசப்பட்டவை என்பதோடு இவருக்கும் துறையில் புகழையும் பெற்றுத்தந்தவை. பெண்களின் சுகாதாரம் பற்றி இவர் உருவாக்கிய ஹார்பிக் விளம்பரம் கேன்ஸ் விழாவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. வணிகரீதியாக ஹார்பிக், கார்னியர், லோரியல், டெட்டால், டியூரக்ஸ் ஆகிய நிறுவனங்களை சிறப்பாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார். எகனாமிக் டைம்ஸின் 2018ஆம் ஆண்டு விருது, இம்பேக்ட் இதழின் விருதை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர் சுக்லீன் அனேஜா.
கருத்துகள்
கருத்துரையிடுக