மதிய உணவுத்திட்டம்! டேட்டா கார்னர்


மதிய உணவுத்திட்டம்

டேட்டா கார்னர்


ஒரு மாணவருக்கு 100 முதல் 150 கிராம் தானியங்கள் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கான சமையல் செலவு ரூ.4 முதல் 7 வரை ஆகிறது.


26 லட்சம் சத்துணவு பணியாளர்கள் நாடு முழுவதும் மதிய உணவுத்திட்டத்தை நாடெங்கும் சிறப்பாக செயல்பட உதவுகிறார்கள். இவர்கள் மூலம் 11. 59 கோடி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.


இதற்கான செலவுகளை இந்திய அரசும், மாநில அரசுகளும் 60-40 என்ற வகையில் பிரித்துக்கொள்கிறார்கள். யூனியன்பிரதேசங்களுக்கு மத்திய அரசு முழுத்தொகையையும் செலுத்திவிடுகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பு கொண்ட மாநிலங்களுக்கு 90 சதவீத தொகையை இந்திய அரசு வழங்குகிறது.


கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக இந்திய அரசு மாணவர்களுக்கான மதிய உணவிற்கு பதிலாக தானியங்களை வழங்க உத்தரவிட்டுவிட்டது. ஆனால் நிறைய மாநிலங்கள் அதனை பின்பற்றவில்லை.


மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் உணவு தானியங்களையும், சமைப்பதற்கான செலவையும் அளித்து வருகின்றன.


ஆந்திர அரசு மட்டுமே மாணவர்களுக்கு முட்டையை வழங்கி வருகிறது. எப்போதும்போல உணவு தானியங்களையும் அளித்து வருகிறது.


டில்லி, பீகார் மாநிலங்கள் பெற்றோர்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பொருட்களுக்கான பணத்தை செலுத்தி வருகின்றன.


கோவா, தமிழ்நாடு மகாராஷ்டிரம், தெலங்கானா மாநிலங்கள் மதிய உணவுத்திட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.


சத்தீஸ்கர், கர்நாடக மாநிலங்கள் உணவு தானியங்ளளை அளித்து வருகின்றன. கூடவே சமைக்கும் செலவையு்ம் அளித்து வருகிறது.


1995ஆம் ஆண்டு இந்தியாவில் 2,408 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. தொடக்க கல்வியை ஊக்குவிக்கும்பொருட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


1997-98ஆம் ஆண்டு இந்தியாவில் 6,612 இடங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.


2002ஆம் ஆண்டு அரசு பள்ளிகள் கடந்து மதரசாளளுக்கும் கூட மதிய உணவுத்திட்டம் அமலானது.


2009-10 ஆம் ஆண்டில் இத்திட்டம் குழந்தை தொழிலாளர்கள் திட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்