கள்ளச்சாராய தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது? - அரசு மதுபானச்சாலைக்கு நிகரான ஆள்பலம், கட்டமைப்பு!

 

 

 

 https://nenow.in/wp-content/uploads/2018/03/Illegal-liquor-bottles-recovered-in-Namrup.jpg

 

 

பஞ்சாப்பில் நடந்த கள்ளச்சாராய பலி விவகாரத்தில் பல்வீந்தர் கௌர் என்ற பெண் சிக்கினார். இவரும் ஒருவகையில் சமூக தொழில்முனைவோர்தான். ஆம். இந்த மாநிலத்தில் மட்டும் அரசு மதுபானச்சாலை போன்ற சட்ட விரோத நெட்வொர்க்கை உருவாக்கி இருபது ஆண்டுகளாக தொழிலை நடத்தி வந்திருக்கிறார். பஞ்சாப் அரசு மதுபானச்சாலை மூலம் வரியெல்லாம் கட்டி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. கள்ளச்சாராய வியாபாரமும் இதற்கு இணையான வருமானத்தைக் கொண்டுள்ளது. இதற்கென தயாரிப்பு, விநியோகம், வருமானத்தை பிரித்துக்கொள்வது என அனைத்திலும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், கள்ளச்சாராய தயாரிப்புக்குழுவினர் ஒருங்கிணைந்து கையிலுள்ள ஐந்து விரல்களைப்போல இணைந்து வேலை பார்த்து சாதித்து உள்ளனர்.


மூன்சைன், மூச், பாத்டப் ஜின், கள்ளச்சாராயம் என பல்வேறு பெயர்கள் பல்வேறு மாநிலங்களில் புழங்குகின்றன.


எப்படி தயாரிக்கிறார்கள்?

சிம்பிள். சர்க்கரை எந்த காய்கறிகள், பழங்களில் உள்ளதோ அனைத்தையும் நன்றாக இருந்தாலோ, கெட்டுப்போயிருந்தாலோ கவலையே படாமல் சாராயம் தயாரிக்க பயன்படுத்தலாம். பெரும் நிறுவனங்கள் உணவு தானியங்கள், பழங்களைப் பயன்படுத்துவார்கள். கள்ளச்சாரயத்தைப் பொறுத்தவரை குறைந்த விலையில் அதிக கிக் என்பதுதான் இதன் தாரக மந்திரம்.


கூடவே கிக் ஏற்ற பெயிண்ட் தின்னர், டாய்லட் கழுவும் டிஸ்இன்பெக்டன்ட் வேதிப்பொருள், தொழில்துறை ஆல்க ஹால் ஆகியவற்றைக் கலக்குகிறார்கள். இதனால்தான் காபிப்பொடியை பத்து ரூபாய் போட்டு விற்பது போல கள்ளச்சாராயத்தை பத்து ரூபாய் பௌச்சிலும் விற்க முடிகிறது. சின்னி கிருஷ்ணன் அறிமுகப்படுத்தி ஒரு ரூபாய் பௌச் போலவே, கள்ளச்சாராயத்தைப் பொறுத்தவரையில் பத்து ரூபாய் பௌச் செம ஹிட்.


இந்து தமிழ்திசை நூல்கள் போல மதுபானங்கள் அனைத்தும் 150 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. ஆனால் கள்ளச்சாராயத்தின் கிக்கான சரக்கு ரூ. 60 முதல் தொடங்குகிறது. எப்படி முடிகிறது? வரி கிடையாது. குறைந்த முதலீடு, அதிக லாபம் எனும் வியாபார தந்திரம்தான் காரணம். இதைக் குடித்தால் மலிவான விலையில் பார்வைத்திறன் பறிபோதல், உறுப்புகள் சேதமடைவது, உயிர்ப்பலி என பல்வேறு பிரச்னைகள் மக்களுக்கு ஏற்படுகிறது. கள்ளச்சாராய மார்க்கெட்டிற்கு இப்போதுதான் நல்ல ஏற்றமிக்க காலமாக உள்ளது.

indiatoday


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்