ஏ.ஐ. விவசாயம்! - உணவு உற்பத்தியை மேம்படுத்த உதவும் பல்வேறு ஏ.ஐ செயலிகள்

 

 

 

 

 

 

 

 

 

Artificial Intelligence, Robots, Cyborg, Ai, Sci-Fi
cc


 

.. விவசாயம்!

 

செயற்கை நுண்ணறிவு மூலம் வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, நீர் பாய்ச்ச, விலைகளை அறிய முடிகிறது.

முன்னர் விவசாயப் பயிர்களை பூச்சிகள் தாக்கினால், அவற்றைக் காப்பாற்ற அனுபவம் வாய்ந்த விவசாயி அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவிகளை விவசாயிகளை நாடி வந்தனர். இன்று ஸ்மார்ட்போனில் நிறுவும் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களை படமெடுத்து அனுப்பினாலே போதும். பயிர், எதனால் பாதிக்கப்பட்டுள்ளது, அதற்கான தீர்வு என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். “நான் எனது போனில் பிளான்ட்ரிக்ஸ் (plantrix) என்ற ஆப்பை நிறுவினேன். இரண்டே நிமிடங்கள் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்குதலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொண்டேன். இதனால் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது” என்கிறார் திருவாரூர் மாவட்ட விவசாயியான ரவிச்சந்திரன்.

மகாராஷ்டிரத்தில் 2017ஆம்ஆண்டு பருத்தி விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்பட்ட புழுத்தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிர அரசு, இச்சூழலைத் தடுக்க வாத்வானி ஏ.. என்ற நிறுவனத்தை அணுகியது. தற்போது இந்த நிறுவனம் தனது மென்பொருளை விவசாயிகளுக்கு அளித்து சோதித்து வருகிறது. இந்திய நிறுவனங்கள் மட்டுமன்றி, ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களும் விவசாய தொழில்நுட்பத்தில் பங்களிக்க உழைத்து வருகின்றன.

2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பொருளாதார ஆய்வுப்படி, இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 82 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இவர்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் சதவீதம் 18.2(2015படி). தற்போது இந்த அளவு 16 சதவீதமாக சுருங்கியுள்ளது. இந்த சூழலை தொழில்நுட்பம் கொண்டு மாற்றமுடியும். இதுபற்றி வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு வேளாண்மைத் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு வேளாண்மைக்கான ஏ.. சந்தை 70 கோடியாக உள்ளது. 2025இல் இதன் மதிப்பு 300 கோடியாக உயரும் என்று கிராண்ட் வியூ ரிசர்ச் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தகவல்: பிஸினஸ்டுடே




கருத்துகள்