ஏமனில் நடைபெறு்ம் போர்களை ஆவணப்படுத்தும் பெண்மணி! ராத்யா அல்முடாவாக்கல்
ராத்யா அல்முடவாக்கல்
கடந்த ஆண்டு நான் ஏமனில் மனித உரிமைக்காக பாடுபடும் ராத்யாவைச் சந்தித்தேன். அப்போது அமெரிக்கா அந்நாட்டிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப பெறும் முடிவில் இருந்தது. ஏமன் நாட்டு மக்கள் பசியோடு இல்லை பசியோடு இருக்கவைக்கடடுகிறார்கள் என்று ராத்யா கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயற்கை பேரிடர் இல்லாமல் மனிதர்களால் உருவான போரால் ஏமனில் மக்களின் வாழ்க்கை பாதாளத்திற்கு போய்விட்டது.
நான்கு ஆண்டுகளாக சௌதி அரேபியா, அமெரிக்க அரசின் உதவியுடன் ஏமன் மீது போர் செய்து வருகிறது. இங்குள்ள ஹூதி புரட்சியாளர்களை அழிப்பதாக சொல்லி போரிடுகிறது. இதனால் அழிந்தவர்களும், காயமுற்றவர்களும் மக்கள்தான். சௌதியின் வருமானத்தில் பாதிக்கும் மேல் அமெரிக்காவுக்கு செல்கிறது. அமெரிக்க ஆயுத சப்பளை மூலமே முன்னுக்கு வந்துவிடும் போல.
ராத்யா தனது வடானா அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவருகிறார். கூடவே போரால் பாதிக்கப்படும் மக்களின் இழப்பை ஆவணப்படுத்தி வருகிறார். அவரும் அவரது சகாக்களும் உயிரை பணயம் வைத்துதான் இப்பணியை செய்துவருகிறார்கள்.
பெர்னி சாண்டர்ஸ்
இந்த ஆளுமைகள் பற்றிய குறிப்பை வாசித்த நண்பர்களுக்கு நன்றி
நிறைவு பெற்றது.
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக