இம்பேக்ட் 50! - சிஎன்பிசி டிவி 18 தொலைக்காட்சியை முன்னணிக்கு கொண்டு வந்த சாதனைப் பெண்மணி - ஷிரின் பான்

 

 

 

 

ஷிரின் பான்

 

 

ஷிரின் பான்

நிர்வாக ஆசிரியர், சிஎன்பிசி 18

1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காஷ்மீரில் இந்து குடும்பத்தில் பிறந்தவர். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் தத்துவப்படிப்பு, பின்னர் புனே பல்கலைக்கழகத்தில் டிவி, சினிமா பற்றிய படிப்பையும் படித்துள்ளார்.
ஷிரின் பானுக்கு ஊடகத்துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இந்தியா பிஸினஸ் ஹவர், வாட்ஸ் ஹாட், யங் டர்க்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் இவர்தான். யங் டர்க்ஸ் என்ற பெயரில் நூலையும் எழுதி பிரசுரித்திருக்கிறார். இந்த நூலின் பெயரில் நடத்தும் நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் தொழில்நிறுவனங்களைப் பற்றியும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சி 18 ஆண்டுகளாக சிஎன்பிசி டிவி 18 சேனலில் வருவதே வரலாற்று சாதனை. ஷிரின் பான் தலைமைத்துவம் காரணமாக அவரது டிவி, வணிக செய்திகளில் 70 சதவீத சந்தை பங்களிப்பைப் பெற்றுள்ளது. இணையத்திலும் சிஎன்பிசி டிவி 18 கோலோச்சுவதற்கு ஷிரினின் நிர்வாகத்திறன் முக்கிய காரணம்.

வாரன் பஃபட், பில்கேட்ஸ், இந்திரா நூயி, ஷெரில் சான்பெர்க் என பல்வேறு டெக் ஆளுமைகளை, வணிக தலைவர்களை நேர்காணல் செய்த பெருமைக்குரியவர். வேர்ல்ட் எகனாமிக் பாரமின் ஐம்பதாவது ஆண்டு இது. இந்த அமைப்பின் ஆண்டு விழாவில் தொகுப்பாளராக பங்கேற்ற ஒரே இந்திய பொருளாதார டிவி ஆசிரியர் ஷிரின் மட்டும்தான். டாடா குழும தலைவரான சந்திரசேகர், தனது பிரிட்ஜிடல் நேஷன் எனும் நூலை சிஎன்பிசி டிவி 18 சேனலில்தான் வெளியிட்டர். அவரை நேர்காணல் செய்தது வேறு யார் ஷிரின்தான். அதுமட்டுமன்றி, ஆங்கில வணிக செய்தி டிவிகளில் முன்னணியில் இருப்பது சிஎன்பிசி டிவி 18தான். அதற்கு காரணம் யார் என்று மீண்டும் நான் சொல்லத்தான் வேண்டுமா?
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்