உலகை காக்க சூப்பர்ஹீரோக்கள் எடுக்கும் அதிர்ச்சி தரும் முடிவு! - வாட்ச்மேன் 2009

 

 

 

Movie Reviews: Watchmen

 

 

 

வாட்ச்மேன்


Directed byZack Snyder

Written by
Based on
Music byTyler Bates
CinematographyLarry Fong

 

 




டிசி காமிக்ஸின் அடர்த்தியான அரசியல் பேசும் படம். மார்வெல் ஃபேன்டசியான உலகை உருவாக்கி ஏராளமான சூப்பர் நேச்சுரல் திறன் கொண்ட ஆட்கள் அதில் உள்ளே இருப்பதாக காட்டுவார்கள். டிசி முழுக்க சாதாரண மனிதர்களை வைத்தே உலக அரசியலைப் பேச வைத்திருக்கிறார்கள்.

படம் 3 மணிநேரம் 35 நிமிடம் ஓடுகிறது என்பதால் பொறுமையாக பார்க்க முடிபவர்கள்தான் பார்க்கவேண்டும். அதிரடியான திருப்பம் வேண்டும் என்பவர்கள் வேறு படத்தைத்தான் பார்க்கவேண்டும்.

முதல், இரண்டாம் உலகப்போர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் நிகழும் காலகட்டம். அப்போது சூப்பர் ஹீரோக்களை யாரும் தேடவில்லை. அவர்களை மக்களும் எதிர்க்கிறார்கள்.  பின்னாளில் அவர்களுக்கு வயதாகிறது. மெல்ல சூழலைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒதுங்குகிறார்கள். இரவு ஆந்தை,  ஓஸ்மாண்டிஸ் , ரோச்சார்க் என மூவர் மட்டுமே இக்காகட்டத்திலும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள் மெல்ல இறந்துபோகிறார்கள். அல்லது அவர்களால் பாதிக்கப்பட்டவர்களால் கொல்லப்படுகிறார்கள். இதில் காமெடியன் எனும் சூப்பர் ஹீரோ திடீரென அடித்துக்கொல்லப்படுகிறார். அவர் உடல் தெருவில் கிடக்கிறது. அதற்கு காரணம் யார் ரோச்சார்க் தேடுகிறார்.

படம் முழுக்க ரோச்சார்க்கின் குரல் வழியே  பயணிக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் போல அல்ல. நிறைய இடங்களில் குரல் ஒதுங்கிக்கொண்டு விடுகிறது. அதாவது அவர் எழுதிய டைரிக் குறிப்பு வழியாக படம் நகர்கிறது.

மூன்றாவது உலகப்போர் நடைபெறும் சூழல் ஏற்படுகிறது. நிலப்பரப்பு ரீதியான அமெரிக்கா,ரஷ்யா உடனான சிக்கல்தான் காரணம். இதை தடுக்க சூப்பர் ஹீரோ ஒருவர் முயல்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்கள் பல லட்சம் மக்கள் இறக்க காரணமாகிறது. இந்த உண்மையை ரோச்சார்க் கண்டுபிடிக்கிறார். சமரசமே இல்லாமல் செயல்படுகிறார். இதற்காக அவர் கொடுக்கும் விலை அதீமானது. என்ன அது என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Watchmen The End Is Nigh Walkthrough Gameplay - YouTube


அரசியல் நிலைமைகள், அமெரிக்க நாயகர்கள், கடவுள், அணுகுண்டு யுத்தம் என படம் முழுக்க ஏராளமான விஷயங்கள் உண்டு. அதிலும் படத்தின் பாதி சமாச்சாரங்கள், சிறுவன் ஒருவன் படிக்கும் காமிக்ஸ் வழியே நடைபெறுகிறது. ஏறத்தாழ படத்தில் நடைபெறும் விஷயங்களும் காமிக்ஸ் கதையும் ஒரு கட்டத்தில் ஒன்றாகிறது. படத்தில் லாரி, டேன் உடலுறவுக்காட்சிகள் நீளமாக இருக்கிறது. பார்வையாளர்கள் பதற்றமாக இருக்கிறார்கள் என வைத்திருக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. அதுவும் பின்னணியில் அல்லேலூயா பாடல் வேறு ஒலிக்கிறது. காமத்தை விட உயர்ந்த சக்தி உலகில் வேறு என்னதான் இருக்கிறது?

தியாகம்தான் உன்னை உயர்த்தும் என நேரடியாகவே சொல்லிவிட்டார்கள். யாருக்காக, எதற்காக என்பதை படம் பார்த்து புரிந்துகொள்ளுவது உங்களது சாமர்த்தியம்.

தியாகபூமி

கோமாளிமேடை டீம் 

சினிமா விமர்சனம், ஆங்கிலம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்