உளவியலாளர் வாட்சன் செய்த கொடூரமான ஆல்பெர்ட் பி சோதனை!
இருபதாம் நூற்றாண்டின்போது, பல்வேறு உளவியலாளர்கள். மனத்தை புரிந்துகொள்ள முயன்றனர். அதன்படி ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை வழியாக பல்வேறு சோதனைகளை செய்து வந்தனர். குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட சூழ்நிலை வழியாக மனத்தை அறிய முயற்சி செய்தனர். இதன் மறைமுகமான அர்த்தம், அவர்கள் செய்த பல்வேறு சோதனைகள் வேலைக்கு ஆகவில்லை என்பதேயாகும். ஜான் வாட்சன், தோர்ன்டைக் என்ற ஆய்வாளரைப் போலவே குண இயல்புகளை தீவிரமாக ஆராய்ந்தார். கூறிய கருத்துகளும் சர்ச்சைக்குரியவைதான் இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு கொண்ட உளவியலாளராக செயல்பட்டார். இதன் காரணமாக இவரை குண இயல்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளின் தந்தை என பிறர் புகழ்ந்தனர். அழைத்தனர். 1913ஆம் ஆண்ட சைக்காலஜி ஏஸ் தி பிஹேவியரிஸ்ட் வியூஸ் இட் என்ற தலைப்பில் வாட்சன் உரையாற்றினார். இந்த உரைதான் குண இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியமான செயல் அறிக்கை என்று கருதப்பட்டது. இதில், அறிவியல் முறையிலான உளவியல் என்பது மனநிலைகளுக்கான ஆராய்ச்சியை விட முன்முடிவுகள், குணத்தை கட்டுப்படுத்தும் இயல்பு ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். பா...