வர்ஜின் சகோதரி காதலுக்கு கிஃப்ட்
தொண்ணூறுகளில் கனடாவில் அலுவலகத்தில் பணியாற்றிய கர்லா ஹாலோதேன் எனும் பொது அனஸ்தீசியா மருந்து திருடிக்கொண்டு வீடு வந்தார். அங்கு பதினைந்து வயது வர்ஜின் சகோதரிக்கு அதனை உணவில் கலந்து கொடுத்தார். அன்று குடும்பமே பார்ட்டிக்குக்கு செல்லும் மூடில் இருந்தது. போதையில் மயங்கிய இளைய சகோதரியை தூக்கிக்கொண்டு பில்டிங்கின் கீழ் தளத்திற்கு வந்தார்.
அங்கு அவரின் காதலன் பால் பெர்னார்டோ இருந்தான். அவனது நோக்கம், வர்ஜின் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவேண்டும் என்பது. அது இன்று உலகில் சாத்தியமா? கிடையாது. அதேதான். பிரச்னை. எனவே கார்லாவிடம் உறவு கொண்டபோது அவள் வர்ஜின் இல்லை என்று தெரிந்துகொண்டு ஏமாற்றமானான். அதைப் பொறுக்க முடியாத கர்லா, காதலனுக்கு தன் தங்கையை பரிசளிக்க முயற்சித்தாள்.
அதற்காகத்தான் போதைப்பொருள் திருட்டு, உணவில் கலப்பு எல்லலாமே. கர்லா மற்றும் பெர்னார்டோ பார்பி கில்லர்ஸ் என்று புகழ்பெற்று சிறை சென்ற ஆட்கள். இன்று அத்தனை செயல்களையும் செய்து வந்தவர்களில் கர்லா பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராக பணியாற்றுகிறார். மேற்சொன்ன கொடூரங்கள் நடந்து 29 ஆண்டுகள் ஆகின்றன.
1970 ஆம் ஆண்டு மே 4 அன்று பிறந்த கர்லா ஹோமோல்கா, நான்கு சகோதரிகளுடன் வளர்ந்தவர். பள்ளியில் எந்த பிரச்னையும் இல்லை. அனைவருடனும் பேசுபவர், வசீகரமானவர், கால்நடை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 1987 ஆம் ஆண்டு கால்நடை விலங்குகள் தொடர்பான நிகழ்ச்சிக்கு டொரண்டோ சென்றார். அங்குதான் விதி, 23 வயது பால் பெர்னார்டோவைச் சந்திக்க வைத்தது.
பார்த்தவுடன் பற்றிக்கொண்ட காதல் தீ, இருவரையும் கொழுந்து விட்டு எரியச்செய்தது. சந்தித்த சில நாட்களிலேயே இரண்டறக்கலந்து மகிழ்ந்தனர். சாடோ மாச்சிசம் எனும் துன்புறுத்தி இன்பம் காணும் முறையை செக்சில் இருவரும் கடைபிடித்தனர். இதில் பெர்னார்டோ எஜமானன். கர்லா, செக்ஸ் அடிமை. பெர்னார்டோ கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் நீர் போல குணம் உடையவர் என்பதால், அவரின் கிரிமினல் குணங்களை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.
கர்லா, பெர்னார்டோவை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அங்குதான் டேமி ஹோமோல்கா பெர்னார்டோவை ஈர்த்தாள். அவளுக்கும் அவரின் மீது சொல்லமுடியாத ஈர்ப்பு இருந்தது. இருபதில் சுனாமியாக எழும் ஹார்மோன் வேகம் அப்படி.
அப்போதே பால், டேமியை மடிக்க முடிவு செய்தார். எப்படி செய்வது? காதலி கர்லாவை பேசிச் சரிகட்டினார். நீ வர்ஜின் கிடையாது. எனவே நம் காதலுக்கு பரிசாக வர்ஜின் பெண்ணை எனக்குக் கொடு என்று ஆர்டர் போட, அடிமையாகி நின்ற கர்லா மாஸ்டரின் சவுக்குக்கு அடிபணிந்தார்.
உடனே வீட்டில் கண்ணில் பட்டது டேமிதான். பால் நினைத்ததும் அதேதானே? கால்நடை மருத்துவமனையில் கிடைத்த மருந்துகளைக் கொண்டுவந்து டேமியை மயக்கப்படுத்தி காதலுக்கு விருந்தாக்கினார். இது பலமுறை நடைபெற்றது. பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு வந்த சிறுமி, சாலையில் நடந்து சென்ற சிறுமி என கர்லாவுக்கு ஆணைகள் வந்துகொண்டே இருந்தன. டேமியை கற்பழித்து சில மாதங்களில் காதல், மரியாதை, கட்டளைக்கு அடிபணியவேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பெர்னார்டோவை கர்லா மணந்தார்.
இறுதியில் பெர்னார்டோவுக்கு 1995 ஆம் ஆண்டு 30 கற்பழிப்புகளுக்காக ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கர்லாவுக்கு குறைந்த அளவு தண்டனையே வழங்கப்பட்டது. இன்று அவர் தன் பெயரை மாற்றிக்கொண்டு மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.
நன்றி: allthatsinteresting.com
தொகுப்பு: ஆஷா