போராட்டங்களின் அடிப்படை- வெல்லுமா -தோற்குமா?






Image result for honghong protest



போராட்டங்கள் வெல்லுமா?

ஹாங்காங்கில் ஜூன் பனிரெண்டாம் தேதி தொடங்கிய போராட்டம் ஹாங்காங் கடந்து உலகளவில் மக்களின் கவனத்தையும் ஊடகங்களையும் ஈர்த்தது. காரணம், சீனா வர்த்தக மையமான ஹாங்காங்கை எப்படி பல்வேறு சட்டங்கள் மூலமாக சீனாவின் துணை நாடாக மாற்ற முயல்கிறது என்பதை மக்கள் போராட்டம் உலகிற்கு காட்டியது.

காவல்துறை மையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராடத் தொடங்கினர். கேரி லாம் என்ற ஹாங்காங்கின் நிர்வாகத்தலைவரை மாற்றக்கோரி போராட்டம் மாறியுள்ளது. முதலில் தொடங்கிய போராட்டம்  லாம் அமல்படுத்திய குற்றச்சட்டம் தொடர்பானது.

சாதாரணமாக பேரணி, அமர்ந்து போராடி செய்திகளை உலகிற்கு கூறிய மக்கள் இன்று அதில் வன்முறை வழியாகவும் உணர்த்துவதற்கு தயங்குவதில்லை என்கிறார் டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்த மார்க் ஃபெய்ன்பெர்க். கடந்த ஏப்ரலில் இம்முறையில் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டத்தை மத்திய லண்டனில் மக்கள் முன்னெடுத்தனர்.

மக்களின் கவனம் ஈர்ப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மரம் வெட்டி போடுவது, பஸ்களை எரிப்பது, கிடைத்தால் மனிதர்களை பஸ்ஸில் வைத்து எரிப்பது என பல்வேறு வழிகளில் போராட்டம் குறித்து இந்தியளவில் செய்தியாக்குவது உண்டு. போராட்டம் குறித்து ஃபெய்ன்பெர்க் குழுவினர் ஆராய்ச்சி செய்தனர். இதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக வாஷிங்டனில் 5 லட்சம் பேர் ஒன்று கூடியது முக்கியமானது. அதேபோல ட்ரம்ப் தேர்தலில் நின்றபோதும் அவருக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி சாலையில் பேரணியாக சென்றனர்.

இன்று மக்களை இணைப்பதற்கு சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவுகின்றன. முன்பு, சாதாரணமாக மக்கள் பிறர் மூலமாக தகவல் கேள்விப்பட்டு போராட்டத்தில் இணைவார்கள். அந்த விஷயம் இன்று, சமூக வலைத்தளங்கள் மூலமாக நடைபெறுகிறது. 2005 முதல் 2017 காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதால் 177 நிறுவனங்களின் பங்குகள் கீழே சரிந்தன. இது முக்கியமான சமூகமாற்றத்திற்கு காரணமாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் இம்முறையில் வெளியான மீடு சர்ச்சை, பெண்களின் மீதான பாலியல் பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் இது வெளியாகி இந்தியாவில் பாலிவுட் டோலிவுட், கோலிவுட் வரை சுழன்றடித்தது.

இதுவும் போராட்டம்தான். வெற்றி, தோல்வி என அனைத்து போராட்டங்களையும் பிரிப்பது கடினம்.


நன்றி: நியூ சயின்டிஸ்ட்