அறிவியல் பிட்ஸ்!




பிட்ஸ்

2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நாவின் வறுமை ஒழிப்பைச் சாதிக்க தனிநபருக்கு தலா 140 ரூபாய் தினசரி அரசு வழங்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிற ஆசிய நாடுகளுக்கு இத்தொகை ஒரு டாலர் மதிப்பில் உள்ளது.


42 நாடுகளைச் சேர்ந்த 143 மில்லியன் மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழல்கின்றனர். ஆஃப்கானிஸ்தான், சூடான், காங்கோ, நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் உணவு பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளன.


26 நாடுகள் சூழல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் 10 மில்லியன் மக்களும், உணவு பாதுகாப்பு பிரச்னையில் 23 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவின் நியூ ஹாம்ஸையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அங்கு வாழ்ந்த 14 காட்டு தேனீக்கள் இனம் அழிந்துவிட்டது என கண்டறிந்துள்ளனர்.

கட்டடங்களில்  பசுமை தாவரங்களை வளர்த்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த போர்லாண்ட் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்துள்ளது.