அமைதிதான் வேண்டும் - ரத்தம் தெறிக்க அகிம்சை படம் -அரவிந்த சமேத




Image result for aravinda sametha veera raghava



அரவிந்த சமேத வீரராகவ (தெலுங்கு)

திரிவிக்ரம்

பிஎஸ் வினோத்

தமன் எஸ் எஸ்



Related image



தன் அப்பாவைக் கொன்ற எதிரிகளை அடக்கி ஊரில் அமைதி நிலைநாட்டுவதுதான் நாயகனின் லட்சியம். சாதித்தாரா என்பதுதான் கதை.

சூப்பர்!

கதை, கரம் மசாலாவிற்கானதுதான். ஆனால் திரிவிக்ரம் தன் பாணியில் அதைக் கையில் எடுத்து அக்கறையாக வசனங்களை எழுதி பாசத்தை நேசத்தை பார்க்கும் அனைவரின் மனதிலும் விதைத்துள்ளார். பாடலுக்கு மட்டும் வரும் நாயகின கதாபாத்திரத்தையும் வலுவாக உட்கார வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் வலுவாக பெண்கள் தாங்கி நிற்பதை படமெங்கும் உணர முடிகிறது. மற்றபடி நிலக்கிழார் பெருமை பேசும் படம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிக்காக தன்னை தாழ்த்தி அமைதி சந்திப்பில் கைகளை உயர்த்துவது, தந்தை கண்ணெதிரே இறப்பதைப் பார்த்து நொறுங்கி மீள்வது என என்டிஆர் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்பு. அடித்து நொறுக்கியுள்ளார். நானாக்கு பிரேமதா, ஜனதா காரேஜ் படத்திற்குப் பிறகு அவரது கேரியரில் இது சிறந்த படம்தான்.

Image result for aravinda sametha veera raghava


ஐயையோ!

முதல் காட்சியில் தெறிக்கும் ரத்தம்தான் இது தெலுங்குப்படம் என நினைவூட்டுகிறது. மற்றபடி மனவலிமையோடு ரத்த த்தையும், ஜூனியரின் சிக்ஸ்பேக்ஸையும் பார்த்து கடந்துவிட்டால் பிழைத்தோம்.


ஆஹா...

தமனுக்கு கிடைத்த வாய்ப்பு. பின்னணி இசை, கிராமத்து பாடல் என அனைத்திலும் பின்னி எடுத்திருக்கிறார். சோகம், உற்சாகம், காதல், வருத்தம், விரக்தி என அத்தனை விஷயங்களையும் சிறு சிறு இசைத்துணுக்குகளாக அடுக்கியிருக்கிறார். பிஎஸ் வினோத்தின் கேமரா அத்தனை நேர்த்தியாக காட்சிகளை பதிவு செய்திருக்கிறது. கொள்ளை அழகாக இருக்கிறது. கிராம காட்சிகள் செம்புழுதி பூசினால், நகரம் வெளிச்சத்தில் மினுங்குகிறது.

வன்முறை வேண்டாம் அமைதியும் வளர்ச்சியும் வேண்டும் என்று கமர்சியலாக தன் பாணியில் சொல்லியிருக்கிறார் திரிவிக்ரம்.


கோமாளிமேடை டீம்







பிரபலமான இடுகைகள்